5 ஐபிஎல் கோப்பைகளை வாங்கிய உங்களிடம் அதை எதிர்பாத்தது ஏமாந்து போய்ட்டேன் – ரோஹித் மீது கவாஸ்கர் ஏமாற்றம்

Sunil Gavaskar
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 12ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட இந்திய அணி நிறைய விமர்சனங்களை எழுப்பியது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்திக்க ரோஹித் மற்றும் விராட் ஆகியோரும் காரணமாக அமைந்த நிலையில் அனைத்து பழியையும் புஜாரா மீது போட்டு கழற்றி விட்ட தேர்வுக்குழுவை விமர்சித்த சுனில் கவாஸ்கர் ரஞ்சி கோப்பையில் அசத்தும் சர்பராஸ் கானை தேர்ந்தெடுக்காமல் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

TEam India Rohit Sharma

- Advertisement -

அதே போல வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரரை துணை கேப்டனாக அறிவிக்காமல் ரகானேவை நியமித்ததும் சௌரவ் கங்குலி போன்ற முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. முன்னதாக 2014இல் 7வது இடத்தில் தவித்த இந்தியாவை 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்து வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் பதவி விலகிய பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவமிக்க ரோஹித் சர்மா முழு நேர கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கவாஸ்கர் ஏமாற்றம்:
இருப்பினும் வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் வெற்றிகளை பெற்ற அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்தார். அதை விட பொறுப்பேற்றது முதல் காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக இங்கிலாந்து மற்றும் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காத அவர் முதல் முறையாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை வழி நடத்தினார்.

Rohit

ஆனால் அதில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் முதலில் பேட்டிங் செய்யாமல் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 இடது கை வீரர்கள் இருந்தும் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை கழற்றி விட்ட அவர் சுமாராக கேப்டன்ஷிப் செய்தது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்குவது போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவமிக்க ரோஹித் சர்மா நிறுத்துவார் என்று எதிர்பார்த்ததாக சுனில் கவாஸ்கர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“ரோகித் சர்மாவிடம் இருந்து நான் நிறைய எதிர்பார்த்தேன். குறிப்பாக இந்திய மண்ணில் நீங்கள் வெற்றி பெறுவது சுலபமானது. ஆனால் வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் போட்டிகளில் தான் உங்களுக்கு உண்மையான சவால் காத்திருக்கிறது. அந்த இடத்தில் தான் அவர் நமக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். சொல்லப்போனால் ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவத்தைக் கொண்டு அவரால் தமக்கு மிகவும் பிடித்த டி20 கிரிக்கெட்டில் கூட சரியான வீரர்களை கலவையாக தேர்ந்தெடுத்து ஃபைனலுக்கு அழைத்துச் சென்று இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றமாகும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:Ashes 2023 : அதிரடியாக விளையாடி இங்கிலாந்தை காப்பாற்றிய ஹரி ப்ரூக் – 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை

அப்படி டி20 உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஆகிய 2 விதமான ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க தவறியக ரோகித் சர்மா அடுத்ததாக வரும் அக்டோபரில் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பையில் கேப்டனாக செயல்பட உள்ளார். ஒருவேளை அதிலும் வெற்றியை பெறும் தவறும் பட்சத்தில் அதுவே அவர் இந்தியாவுக்கு கேப்டனாக செயல்படும் கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement