Ashes 2023 : அதிரடியாக விளையாடி இங்கிலாந்தை காப்பாற்றிய ஹரி ப்ரூக் – 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை

Harry Brook
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே தலை குனிந்து பின்னடைவுக்குள்ளானது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடி ஆட்டத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு வழக்கம் போல விளையாடுமாறு முன்னாள் வீரர்கள் விமர்சித்த நிலையில் ஜூலை 6ஆம் தேதி ஹெண்டிங்க்லே மைதானத்தில் துவங்கிய வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை 263 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.

- Advertisement -

அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய மிட்சேல் மார்ஷ் 118 (118) ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட கி.மீ வேகத்தில் வீசிய மார்க் வுட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 224 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போராடி 80 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 26 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா முன்பை விட சுமாராக செயல்பட்டு வெறும் 224 ரன்களுக்கு அவுட்டானது போட்டியில் திருப்பு முனையாக அமைந்தது.

அதிவேகமான உலக சாதனை:
அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 77 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ், ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இறுதியில் 251 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 43 ரன்கள் எடுத்த போதிலும் பென் டூக்கெட் 23, மொய்ன் அலி 5, ஜோ ரூட் 21, பென் ஸ்டோக்ஸ் 13, ஜானி பேர்ஸ்டோ 5 என முக்கிய வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். அதனால் சரிவை சந்தித்த அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்ற இளம் வீரர் ஹரி ப்ரூக் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

ENG vs AUS 3

அதே சமயம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிரடியையும் கைவிடாமல் 9 பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் அரை சதமடித்து 75 (93) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். அதை வீணடிக்காமல் கிறிஸ் ஓக்ஸ் 32* ரன்களும் மார்க் வுட் 16* ரன்களும் எடுத்ததால் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து இத்தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு பதிலடியும் கொடுத்துள்ளது.

- Advertisement -

அதனால் மிட்சேல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை எடுத்து போராடியும் ஆஸ்திரேலிய அணியால் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்ற முடியாமல் போனது. இந்த வெற்றிக்கு 7 விக்கெட்டுகள் மற்றும் 30 ரன்கள் எடுத்த மார்க் வுட் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றாலும் சவாலான 2வது இன்னிங்ஸில் தரமான ஆஸ்திரேலிய பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு 75 ரன்கள் குவித்த ஹரி ப்ரூக் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார் என்றே சொல்லலாம்.

கடந்த 2022 அண்டர்-19 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து வீரராக சாதனை படைத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தை எடுத்தார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட அவர் கடந்த நவம்பரில் பாகிஸ்தான் மண்ணில் நடந்த தொடரில் அபாரமாக விளையாடி 3 – 0 (3) என்ற கணக்கில் தொடரை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் இங்கிலாந்தின் விராட் கோலி என்று கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பாராட்டுகளையும் அள்ளிய அவர் ஐபிஎல் 2023 தொடரில் ஹைதராபாத் அணில் சுமாராக செயல்பட்டதால் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இதையும் படிங்க:இது ட்ரைலர் தான், பழைய கர்ஜனையுடன் நெதர்லாந்தை ஃபைனலில் ஓடவிட்டு – இந்தியாவுக்கு 2023 உ.கோ’யில் மிரட்ட வரும் இலங்கை

இருப்பினும் இந்த தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் 1028 ரன்களை எடுத்துள்ளார். இதன் வாயிலாக 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 1000 ரன்கள் அடித்த வீரர் என்ற நியூசிலாந்தின் கோலின் டீ கிராண்ட்ஹோம் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஹரி ப்ரூக் (இங்கிலாந்து) : 1058*
2. கோலின் டீ கிராண்ட்ஹோம் (நியூஸிலாந்து) : 1040
3. டிம் சௌதீ (நியூஸிலாந்து) : 1167
4. பென் டூக்கெட் (இங்கிலாந்து) : 1168

Advertisement