இது ட்ரைலர் தான், பழைய கர்ஜனையுடன் நெதர்லாந்தை ஃபைனலில் ஓடவிட்டு – இந்தியாவுக்கு 2023 உ.கோ’யில் மிரட்ட வரும் இலங்கை

Sri Lanka
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதில் தொடரை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உள்ளிட்ட டாப் 8 கிரிக்கெட் அணிகள் சூப்பர் லீக் தொடரின் வாயிலாக நேரடியாக தேர்வானது. அதைத்தொடர்ந்து எஞ்சிய 2 அணிகளை தீர்மானிப்பதற்காக ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற குவாலிபயர் தொடரில் குரூப் ஏ பிரிவில் ஆரம்பம் முதலே தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் 6 சுற்றுடன் வெளியேறியது.

குறிப்பாக 1975, 1979 சாம்பியன் பட்டங்களை வென்ற அந்த அணி முதல் முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே போல சொந்த மண்ணில் லீக் சுற்றில் அசத்திய ஜிம்பாப்வே சூப்பர் 6 சுற்றில் ஸ்காட்லாந்திடம் தோல்வியை சந்தித்து பரிதாபமாக வெளியேறியது. மேலும் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்பட்டு வந்த நெதர்லாந்து சூப்பர் 6 சுற்றில் முக்கிய போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி ரன் ரேட் அடிப்படையில் நூலிழையில் ஃபைனலுக்கும் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கும் தகுதி பெற்று அசத்தியது.

- Advertisement -

அசத்திய இலங்கை:
ஆனால் மறுபுறம் குரூப் பி பிரிவில் ஆரம்பம் முதலே அசத்திய 1996 சாம்பியன் இலங்கை லீக் சுற்றில் 4 போட்டிகளிலும் தொடர் வெற்றிகளைப் பெற்று சூப்பர் 6 சுற்றிலும் ஜிம்பாப்வே போன்ற அணிகளை தோற்கடித்து முதல் அணியாக ஃபைனலுக்கும் 9வது அணியாக 2023 உலகக்கோப்பைக்கும் தகுதி பெற்றது. அந்த நிலைமையில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய இந்த குவாலிபயர் தொடரின் இறுதிப்போட்டி ஜூலை 9ஆம் தேதி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை சற்று தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த 47.5 ஓவரில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சஹன் அரச்சிகே 57 ரன்களும் குசால் மெண்டிஸ் 43 ரன்களும் எடுக்க நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக வேன் பீக், ரியான் க்ளென், விக்ரம்ஜித் சிங், ஜூல்பிகர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

- Advertisement -

ஆனால் அதைத்தொடர்ந்து 234 ரன்களை துரத்திய நெதர்லாந்து ஆரம்ப முதலே திண்டாட்டமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இலங்கையின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 23.3 ஓவரில் வெறும் 105 ரன்களுக்கு பரிதாபமாக சுருண்டது. அதிகபட்சமாக மேக்ஸ் ஓ’தாவுத் 33 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக மஹிஸ் தீக்சனா 4 விக்கெட்களையும் மதுசங்கா 3 விக்கெட்டுகளையும் வணிந்து ஹசரங்கா 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.

அதனால் 128 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இலங்கை 2023 உலகக்கோப்பை குவாலிபயர் தொடரின் கோப்பையை வென்று அசத்தியது. மறுபுறம் தோல்வியை சந்தித்தாலும் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு நெதர்லாந்து 10வது அணியாக தகுதி பெற்றது. முன்னதாக 1996 உலக கோப்பையை வென்று சங்ககாரா, முரளிதரன், ஜெயசூர்யா, மலிங்கா, ஜெயவர்த்தனே, வாஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் உலகையே மிரட்டி வந்த இலங்கை 2015 உலகக் கோப்பைக்குப் பின் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் தடுமாறி வருகிறது.

- Advertisement -

இருப்பினும் அதிலிருந்து மீண்டெழுவதற்கு போராடி வரும் இலங்கை கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது அந்நாட்டு ரசிகர்களுக்கு புதிய தெம்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:2023 உலகக்கோப்பை : தகுதிச்சுற்று போட்டியில் வென்று கடைசி இரண்டு இடங்களை உறுதிசெய்த – அந்த 2 அணிகள் எது தெரியுமா?

அந்த வரிசையில் இந்த குவாலிபயர் தொடரில் 4 லீக் சுற்று மற்றும் 4 சூப்பர் 6 சுற்று போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற இலங்கை ஃபைனலையும் சேர்த்து மொத்தமாக 9 போட்டிகளில் வென்று சாம்பியன் பட்டத்துடன் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் எஞ்சிய அணிகளையும் மிரட்டுவதற்கு முன்னோட்டத்துடன் பழைய கர்ஜனையுடன் வருகிறது என்று சொல்லலாம்.

Advertisement