2023 உலகக்கோப்பை : தகுதிச்சுற்று போட்டியில் வென்று கடைசி இரண்டு இடங்களை உறுதிசெய்த – அந்த 2 அணிகள் எது தெரியுமா?

worldcup
- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து தற்போது இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Worldcup

- Advertisement -

இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் ஏற்கனவே நேரடியாக 8 அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுவிட்டன.

அதனை தவிர்த்து மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தகுதிச்சுற்று போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் இரண்டு குழுக்களாக பங்கேற்று விளையாடின.

NED vs SL

இந்த பத்து அணிகளில் சூப்பர் 6 சுற்றுக்கு குரூப் ஏ-பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும், குரூப் பி-யில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய நாடுகளும் தகுதி பெற்றன. அதனை தொடர்ந்து சூப்பர் சிக்ஸ் சுற்றுகளின் முடிவில் தற்போது ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், ஓமன் ஆகிய நாடுகள் வெளியேறியன.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் விளையாடணும்னா இதை பண்ணியே ஆகனும் – பாக் மந்திரி கெடுபிடி

இதன்காரணமாக இன்று நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின்னர் கணக்கிடப்பட்ட முடிவுகளின் படி இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் அதிகாரபூர்வமாக 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளன.

Advertisement