இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் விளையாடணும்னா இதை பண்ணியே ஆகனும் – பாக் மந்திரி கெடுபிடி

- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 உலகக்கோப்பை தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணையை ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி அதிகாரபூர்வமாக வெளியிட்டு விட்டது. அதனை தொடர்ந்து இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தைக் கொண்டுள்ளது.

worldcup

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா? பங்கேற்காதா? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. எதிர்வரும் இந்த உலககோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி அக்டோபர் 15-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறயிருக்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் விளையாட்டு துறை மந்திரி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி போன்றோர் அடங்கிய பாகிஸ்தான் அரசு குழு ஒன்று இந்த விவகாரம் குறித்து அமர்ந்து பேசிய பின் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அந்த முடிவின் அடிப்படையிலேயே பாகிஸ்தான் அணியானது இந்தியா வந்து உலக கோப்பை தொடரில் பங்கேற்குமா? பங்கேற்காதா? என்பது தெரியவரும்.

INDvsPAK-1

இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெறயிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்காவிட்டால் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் இஷான் மசாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அல்லாமல் பொதுவான இடத்தில் தாங்கள் விளையாடும் போட்டிகளை வைக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை வைக்கும் போது நாங்களும் உலகக்கோப்பை தொடரின் போது இந்தியாவை தவிர்த்து பொதுவான மைதானத்தில் எங்களது போட்டிகளை வையுங்கள் என்று கோரிக்கை விடுப்போம்.

இதையும் படிங்க : இதை விட கடவுள் பெரிய சான்ஸ் கொடுப்பாரு, வெ.இ டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் – பஞ்சாப் வீரர் ஆதங்கம்

இந்த விவகாரத்தில் 11 பேர் கொண்ட மந்திரிகள் குழு ஆலோசனை நடத்தி அதன்பின்னர் பிரதமரிடம் முடிவுகளை தெரிவிப்போம். பிரதமர் தான் இறுதி முடிவு எடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement