இதை விட கடவுள் பெரிய சான்ஸ் கொடுப்பாரு, வெ.இ டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் – பஞ்சாப் வீரர் ஆதங்கம்

PBKS vs MI Jofra Archer Jitesh Sharma
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 2 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. அதில் கடைசியாக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் அணியை உருவாக்கும் வேலையை துவங்கியுள்ள பிசிசிஐ நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் அசத்திய யசஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற வீரர்களை முதல் முறையாக தேர்ந்தெடுத்து வாய்ப்பு கொடுத்துள்ளது.

Jaiswal-and-Rinku

- Advertisement -

 

இருப்பினும் அந்த அணியில் கொல்கத்தாவுக்கு மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் பினிஷராகவும் செயல்பட்ட ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது நிறைய விமர்சனங்களை எழுப்பியது. அதே போல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜித்தேஷ் சர்மாவும் தேர்ந்தெடுக்கப்படாதது சில ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த அவர் கடந்த 2022 ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பஞ்சாப் அணியில் 10 இன்னிங்ஸில் வாய்ப்பு பெற்று 234 ரன்களை 163.64 ரன்களை விளாசி அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

கடவுள் வாய்ப்பு கொடுப்பாரு:
அதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பைக்கு குறைந்தபட்சம் பேக் அப் வீரராக அவரை தேர்வு செய்வேன் என்று வீரந்த சேவாக் முதல் முறையாக பாராட்டினார். அந்த நிலையில் இந்த சீசனில் முழுமையான 14 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் 309 ரன்களை 156.06 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து மீண்டும் சிறப்பாகவே செயல்பட்டார். குறிப்பாக லோயர் மிடில் ஆர்டரில் தன்னுடைய விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் ஆரம்பத்தில் இருந்தே பவுண்டரிகளை பறக்க விட்டு வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ரன்களை எடுத்தது அவருடைய ஸ்பெஷலாக அமைந்தது.

- Advertisement -

Jitesh Sharma

அதன் காரணமாக காயமடைந்துள்ள ரிஷப் பண்ட்க்கு பதிலான மாற்று வீரராக செயல்படுவதற்கு ஜித்தேஷ் சர்மா தகுதியானவர் என்று கெவின் பீட்டர்சன், வீரேந்திர சேவாக் போன்ற முன்னாள் வீரர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். சொல்லப்போனால் கடந்த பிப்ரவரியில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முதல் முறையாக தேர்வான அவருக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனால் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நிச்சயம் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிசான் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக தேர்வானதால் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இருப்பினும் இதற்காக வருத்தப்படவில்லை என்று தெரிவிக்கும் ஜிதேஷ் சர்மா கடவுள் தமக்கு விரைவில் இதை விட சிறந்த வாய்ப்பு கொடுப்பார் என்று நம்புவதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

Jitesh-Sharma

“ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் கடவுள் எனக்கு இதை விட பெரிய திட்டத்தை வைத்திருக்கிறார் என்று சொல்லலாம். கடந்த நியூசிலாந்து தொடரில் தேர்வான போது இந்திய அணியினர் என்னை வரவேற்றனர். குறிப்பாக ராகுல் டிராவிட் சார் நான் சிறப்பாக செயல்படுவதாகவும் என்னை போன்ற வீரர்களையே அவர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் நான் விளையாடும் இடத்தில் பெரிய ரன்கள் அடிக்கவில்லை என்றாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ரன்களை எடுப்பதே முக்கியமென்று அவர் ஆதரவு தெரிவித்தார்”

இதையும் படிங்க:Ashes 2023 : ஒரு வீரரை ட்ராப் செய்ததால் கிடைத்த மெகா பலன் – சொன்னதை செஞ்சு காட்டிய இங்கிலாந்து, ஆஸியை வீழ்த்தியது எப்படி?

“குறிப்பாக அணியின் வெற்றிகளில் பங்காற்றுவதே முக்கியம் என்று அவர் கூறினார். பொதுவாக நான் விளையாடும் இடத்தில் திடீரென டாப் ஆர்டரில் 4 – 5 விக்கெட்கள் விழுந்து சரிவு ஏற்பட்டால் நிலைத்து நின்று 7 – 8 ஓவர்கள் வரை விளையாட நேரிடும். அது போன்ற சூழ்நிலைகளில் உங்களால் எதுவும் செய்ய முடியாது என்றாலும் போட்டியில் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் கணிசமான ரன்களை எடுத்தாலே அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெறும்” என்று கூறினார்.

Advertisement