Ashes 2023 : ஒரு வீரரை ட்ராப் செய்ததால் கிடைத்த மெகா பலன் – சொன்னதை செஞ்சு காட்டிய இங்கிலாந்து, ஆஸியை வீழ்த்தியது எப்படி?

ENG vs AUS 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மறுபுறம் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் கையில் வைத்திருந்த வெற்றிகளை கோட்டை விட்டதால் இங்கிலாந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் 3 – 0 என்ற கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது போல் 3 – 2 (5) என்ற கணக்கில் இத்தொடரையும் வெல்வோம் என்று கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உறுதியுடன் இருந்தார்.

அந்த நிலையில் ஜூலை 6ஆம் தேதி ஹெண்டிங்க்லே நகரில் துவங்கிய வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் முறையாக தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 263 ரன்கள் மட்டுமே எடுத்தது. வார்னர் 4, கவாஜா 13, லபுஸ்ஷேன் 21, ஸ்மித் 22 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய போதிலும் மிட்சேல் மார்ஷ் அதிரடியாக சதமடித்து 118 (118) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் மிரட்டலாக பந்து வீசி அசத்திய மார்க் வுட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அதை விட தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 237 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜோ ரூட் 19, ஜானி பேர்ஸ்டோ 12 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ் மீண்டும் போராடி 80 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து 26 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா முன்பை விட தடுமாற்றமாக செயல்பட்டு 224 ரன்களுக்கு அவுட்டானது இங்கிலாந்துக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக வார்னர் 1, ஸ்மித் 1, மார்ஷ் 28, லபுஸ்ஷேன் 33 ரன்கள் என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்காமல் பின்னடைவை ஏற்படுத்திய ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 77 ரன்கள் எடுக்க பந்து வீச்சில் மிரட்டிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

இறுதியில் 251 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு பென் டூக்கெட் 23 ரன்களில் அவுட்டாக்கிய மிட்சேல் ஸ்டார்க் அடுத்து வந்த மொய்ன் அலியை 5 ரன்னில் அவுட்டாக்கி அச்சுறுத்தலை கொடுத்தார். இருப்பினும் அவருக்கு அசராமல் நங்கூரமாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 44 ரன்களும் மறுபுறம் நிதானத்தை காட்ட முயற்சித்த ஜோ ரூட் 21 ரன்களிலும் அவுட்டானார். ஆனால் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 13, ஜானி பேரஸ்டோ 5 என 2 முக்கிய வீரர்களை குறுகிய இடைவெளிகளில் அவுட்டாக்கிய ஸ்டார் மீண்டும் அச்சுறுத்தலை கொடுத்தார்.

இருப்பினும் அந்த சமயத்தில் இளம் வீரர் ஹாரி ப்ரூப் அடுத்து வந்த கிறிஸ் ஓக்ஸ் உடன் இணைந்து சிறப்பாக விளையாடி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். ஆனால் 7வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய அவரையும் 75 (93) ரன்களில் ஸ்டார்க் அவுட்டாக்கியதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் அடுத்ததாக வந்த மார்க் வுட் அதிரடியாக 16* (8) ரன்கள் அடித்து பவுண்டரியுடன் ஃபினிசிங் செய்ததால் கிறிஸ் ஓக்ஸ் எடுத்த 32* ரன்கள் உதவியுடன் 254/7 ரன்கள் எடுத்த இங்கிலாந்து வெறும் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.

- Advertisement -

மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பி 300 ரன்களை கூட எடுக்காதது தோல்வியை கொடுத்தது. அதை விட முதலிரண்டு போட்டிகளில் பெரிய பின்னடைவு கொடுத்த ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனை அதிரடியாக நீக்கி சேர்த்த மார்க் வுட் மொத்தமாக 7 விக்கெட்களும் ஃபினிஷிங் ஷாட் உட்பட 30* ரன்களும் எடுத்ததே இங்கிலாந்தின் வெற்றியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் இடம்பெறவில்லை – வெளியான தகவல்

அந்த வகையில் நிச்சயம் மீண்டெழுந்து கோப்பையை வெல்வோம் என்று கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சொன்னதை நிரூபித்துள்ள இங்கிலாந்து 2 – 1* (3) என்ற கணக்கில் பின்தங்கியிருந்தாலும் பதிலடி கொடுக்க துவங்கியுள்ளது இத்தொடரை மேலும் விறுவிறுப்பாக மாற்றியுள்ளது.

Advertisement