IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் இடம்பெறவில்லை – வெளியான தகவல்

Rinku-Singh
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் ஏற்கனவே ரோகித் சர்மாவின் தலைமையின் கீழ் அறிவிக்கப்பட்ட வேளையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Hardik-Pandya

- Advertisement -

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான அந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியை புதிய தேர்வுக்குழு தலைவரான அகார்கர் மற்றும் அவரது குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்த டி20 அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, முகேஷ் குமார் ஆகியோருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை எழுப்பியது. ஏனெனில் சாம்பியன் பட்டம் என்ற சி.எஸ்.கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோன்று கொல்கத்தா அணிக்காக ஃபினிஷர் ரோலில் களமிறங்கி மிகப் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் 14 போட்டிகளில் 59 ரன்கள் சராசரியுடன் 474 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

Rinku Singh 1

அதேபோன்று தனி ஒரு ஆளாக நின்று கொல்கத்தா அணிக்காக நம்ப முடியாத சில வெற்றிகளையும் வாங்கி தந்த அவருக்கு வெஸ்ட் அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியின் பினிஷராக வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொடருக்கான அணியில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

- Advertisement -

இவ்வேளையில் அவர் ஏன் தேர்வாகவில்லை? என்பது குறித்து பிசிசிஐ சார்பில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டதாவது : ரிங்கு சிங் போன்ற ஒரு சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு நிச்சயம் அயர்லாந்து தொடரிலும் அதற்கடுத்து வரும் ஏசியன் கேம்ஸ் தொடரிலும் வாய்ப்பு கொடுக்கப்படும்.

இதையும் படிங்க : தோனியை விட அவர் தான் எப்போதுமே இந்தியாவின் மகத்தான கேப்டன், காரணம் அது தான் – முகமது கைஃப் பாராட்டு

ஒரே தொடரில் அனைவருக்குமே வாய்ப்பு வழங்க முடியாது. எனவே பகுதி பகுதியாக வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்கவே தற்போது ரிங்கு சிங்கிற்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் கிடைக்கவில்லை என்றும் நிச்சயம் எதிர்வரும் தொடர்களில் அவரது பெயர் பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement