தோனியை விட அவர் தான் எப்போதுமே இந்தியாவின் மகத்தான கேப்டன், காரணம் அது தான் – முகமது கைஃப் பாராட்டு

kaif
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக இந்தியா திகழ்வதற்கு 1983 உலகக் கோப்பையை வென்று ஆழமான விதை போட்ட கபில் தேவ் மிகச் சிறந்த கேப்டனாக போற்றப்படுகிறார். அவரைத் தொடர்ந்து முகமது அசாருதீன் நீண்ட காலம் கேப்டனாக செயல்பட்டாலும் உலகக் கோப்பை போன்ற பெரிய வெற்றிகளை பெற்றுக் கொடுக்கவில்லை. அதை விட 90களின் இறுதியில் சூதாட்ட புகாரில் சிக்கித் தவித்த இந்தியாவுக்கு கேப்டனாக பொறுப்பேற்ற சௌரவ் கங்குலி தன்னுடைய ஆக்ரோஷம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக குறுகிய காலத்திலேயே வெற்றி நடை போட வைத்தார். குறிப்பாக சேவாக், கம்பீர், யுவராஜ், தோனி போன்ற தரமான இளம் வீரர்களை கண்டறிந்து வாய்ப்பளித்து வளர்த்த அவர் இந்தியாவை வெளிநாடுகளில் வெல்லும் வலுவான அணியாக மாற்றினார்.

Ganguly

- Advertisement -

மேலும் 2001 கொல்கத்தா டெஸ்ட் போல தோல்வியின் பிடியில் சிக்கினாலும் மனம் தளராமல் போராடி வெற்றி காணும் குணத்தை விதைத்த அவரது தலைமையில் 2002 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் நாட்வெஸ்ட் முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா 2003 உலகக் கோப்பை ஃபைனல் வரை சென்று அசத்தியது. அத்துடன் மும்பையில் சட்டையை கழற்றி சுழற்றி அவமானப்படுத்திய ஆண்ட்ரூ ஃபிளின்டாப்புக்கு அதே போல லார்ட்ஸ் மைதானத்தில் பதிலடி கொடுத்த அவருடைய கேப்டன்ஷிப் எதிரணிகள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்காக வளைந்து கொடுக்காமல் திருப்பி அடிக்கும் தைரியத்தை இந்திய அணியினரிடம் ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

கைஃப் பாராட்டு:
அதை விட 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்தே தோனி மிகச் சிறப்பாக வழி நடத்தி கோப்பையை வென்றார் என்றால் மிகையாகாது. சொல்லப்போனால் முதல் போட்டியிலேயே டக் அவுட்டாகி ஆரம்பத்தில் தடுமாறிய தோனிக்கு டாப் ஆர்டரில் தன்னுடைய இடத்தை கொடுத்து வளர உதவிய கங்குலி கேப்டனுக்கு சிறந்த அடையாளமாக திகழ்ந்தார்.

Ganguly

அந்த வகையில் தோனி 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற சிறந்த கேப்டனாக சாதனை படைத்தாலும் அதற்கான விதையை அன்றே விதைத்த சௌரவ் கங்குலி தான் எப்போதுமே இந்தியாவின் சிறந்த கேப்டன் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் பாராட்டியுள்ளார். குறிப்பாக எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ தைரியமாக விளையாடு என தம்மைப் போன்ற இளம் வீரர்களுக்கு ஆதரவு கொடுத்து வளர்த்த அவரைப் போன்ற கேப்டன் இருக்க முடியாது என்று தெரிவிக்கும் கைஃப் இது பற்றி சமீபத்திய தொலைக்காட்சிப் பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியாவின் சிறந்த கேப்டனாக நான் எப்போதும் கங்குலியை தேர்ந்தெடுப்பேன். குறிப்பாக என்னுடைய ஆரம்ப காலங்களில் நீ தைரியமாக சென்று உன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்து எது நடந்தாலும் உனக்கு ஆதரவு கொடுக்க நான் இருக்கிறேன் என்று அவர் என்னிடம் சொன்னது இன்னும் நினைவுக்கு இருக்கிறது. உங்களுடைய கேப்டன் அப்படி சொல்வது மிகப்பெரிய விஷயமாகும். ஏனெனில் ஒரு இளம் வீரருக்கு கங்குலி போன்ற ஒரு கேப்டன் மிகப்பெரிய ஆதரவு கொடுக்கும் போது நீங்கள் தைரியமாக இந்தியாவின் வெற்றிக்கு விளையாடுவீர்கள்”

kaif

“அந்த வகையில் அவர் அற்புதமான கேப்டன். பொதுவாக கேப்டன்ஷிப் என்பது அனைத்திற்கும் பொறுப்பாக நீங்கள் முன்னின்று சரியான வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாகும். அதற்கு அடையாளமாக செயல்பட்ட கங்குலி இந்திய அணியை உருவாக்கினார்” என்று கூறினார். அந்த வகையில் 49 டெஸ்ட் மற்றும் 146 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை வழி நடத்திய கங்குலி 42.85 மற்றும் 52.05 என்ற நல்ல சராசரியில் வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க:IND vs WI : டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட இஷாந்த் சர்மா எடுத்த அதிரடி முடிவு – விவரம் இதோ

மேலும் அவரது ஆதரவில் வளர்ந்த பல வீரர்களில் ஒருவரான கைஃப் கடந்த 2002இல் இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் முத்தரப்பு கோப்பை ஃபைனலில் 326 ரன்களை துரத்தும் போது யுவராஜ் சிங்குடன் சேர்ந்து 87* (75) ரன்கள் அடித்து மறக்க முடியாத வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement