IND vs WI : டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட இஷாந்த் சர்மா எடுத்த அதிரடி முடிவு – விவரம் இதோ

Ishant-Sharma
- Advertisement -

கடந்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது மீண்டும் ஒருமுறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது. அதனை தொடர்ந்து அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் சுழற்சிக்கான சுற்றுகளானது தற்போது துவங்கியுள்ளது.

அந்த வகையில் வெஸ்ட் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் இந்த தொடருக்கான அணியில் இருந்து சீனியர் வீரரான இஷாந்த் சர்மா அதிரடியாக கழட்டி விடப்பட்டுள்ளார். 34 வயதான இஷாந்த் சர்மா இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 105 போட்டிகளில் பங்கேற்று 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இவ்வேளையில் அவரது வயது முதிர்வு மற்றும் பார்ம் காரணமாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதோடு அவரது இடத்தில் இளம் வீரரான முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட இஷாந்த் சர்மா அடுத்ததாக இந்த இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரில் கமெண்ட்டராக (வர்ணனையாளர்) மாறப்போவதாக அதிரடி முடிவு எடுத்துள்ளார். அந்த வகையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் போது அவர் ஜியோ சினிமாஸ்-காக போட்டியின் வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.

இதையும் படிங்க : தெரியாம தப்பு நடந்துருச்சு மன்னிச்சுடுங்க, ஆஸ்திரேலியர்களிடம் மன்னிப்பு கேட்ட அலெஸ்டர் குக் – காரணம் என்ன

இந்திய அணிக்காக கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகமான இஷாந்த் சர்மா மூன்று வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்று விளையாடியவர் என்ற அனுபவத்துடன் இந்த வர்ணனையாளர் பணியை செய்ய இருப்பது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டவர்கள் அடுத்ததாக வர்ணனையாளராக மாறுவதை வாடிக்கைகாக வைத்திருக்கும் வேளையில் தற்போது இஷாந்த் சர்மாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement