தெ.ஆ அணியின் வெற்றிக்கு குறுக்கே அவர் தான் இருப்பாரு.. இந்திய வீரர் மீது கவாஸ்கர் நம்பிக்கை

Sunil Gavaskar 66
- Advertisement -

கேப் டவுன் நகரில் நடைபெற்று வரும் தென்னாபிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் முதல் நாளிலேயே இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இந்தியாவுக்கு எதிராக குறைந்தப்பட்ச டெஸ்ட் ஸ்கோர் பதிவு செய்த அணியாக மோசமான சாதனை படைத்தது.

அதிகபட்சமாக கெய்ல் வேர்ரின் 15 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவும் தடுமாற்றமாக விளையாடி 153 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக நன்ரே பர்கர், லுங்கி நிகிடி, ரபாடா தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.

- Advertisement -

கவாஸ்கர் நம்பிக்கை:
அதைத் தொடர்ந்து விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 62/3 ரன்கள் எடுத்துள்ளது. தற்சமயத்தில் இன்னும் இந்தியா இப்போட்டியில் 36 ரன்கள் முன்னிலை பெற்றிருப்பதால் தென்னாப்பிரிக்காவை 150 – 200 ரன்களுக்குள் சுருட்டும் பட்சத்தில் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தப் போகும் வீரராக விராட் கோலி இருப்பார் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சவாலான பிட்ச்சில் அவர் தான் வித்தியாசமாக இருப்பார். இது போன்ற பிட்ச்சில் சவாலான பந்துகளில் அனைவரும் அவுட்டாகும் போது அவர் நேர்மறையான அணுகு முறையை காண்பித்தார்”

- Advertisement -

“எனவே அவர் எனக்கு தன்னம்பிக்கையை கொடுக்கிறார். வர்ணனையாளர் அறையில் இருந்து பார்க்கும் எனக்கு அவர் வேறு ஏதோ மைதானத்தில் விளையாடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவர் தம்முடைய பேட்டிங்கில் கட்டுப்பாட்டுடன் செயல்படுகிறார். பிட்ச் அப் செய்யப்பட்ட பந்துகளை கவர் டிரைவ் அடித்த அவர் ஃபுல், ஹூக் ஷாட்களை அடித்தார். அவர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணிக்கு என்ன தேவையோ அதற்கு தகுந்தார் போல் விளையாடுகிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்தியாவை முடிக்க அதுவே போதும்.. இப்போவும் எங்களால் ஜெயிக்க முடியும்.. டீன் எல்கர் சவாலான பேட்டி

அவர் கூறுவது போல முதல் நாளில் இரு அணிகளை சேர்ந்த பேட்ஸ்மேன்கள் மொத்தம் 27 முறை பேட்டிங் செய்தனர். அதில் விராட் கோலி மட்டுமே பவுலர்களுக்கு சவாலாக நின்று அதிகபட்சமாக 46 ரன்கள் அடித்தார். எனவே தம்முடைய அனுபவத்தை பயன்படுத்தி 2வது இன்னிங்ஸிலும் அவர் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்து தொடரை சமன் செய்ய உதவுவார் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பலாம்.

Advertisement