55க்கு ஆல் அவுட்டாக பிட்ச்ல குறையில்ல.. நான் 6 விக்கெட் எடுக்க அவர் தான் காரணம்.. சிராஜ் பேட்டி

Mohammed Siraj Press
- Advertisement -

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 2வது டெஸ்ட் போட்டி முதல் நாளிலேயே இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 55 ரன்களுக்கு சுருண்டு இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக பரிதாப சாதனை படைத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கெய்ல் வேர்ரின் 15 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவும் பெரிய அளவில் அசத்த முடியாமல் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக நன்ரே பர்கர், லுங்கி நிகிடி, ரபாடா தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.

- Advertisement -

பிட்ச் மோசமில்ல:
இறுதியில் 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடி வரும் தென்னாபிரிக்கா முதல் நாள் முடிவில் 62/3 ரன்கள் எடுத்து இன்னும் 36 ரன்கள் பின்தங்கியுள்ளது. அந்த வகையில் இப்போட்டியில் முதல் நாளிலேயே 23 விக்கெட்கள் விழுந்தது மிகப்பெரிய அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக 153/4 என்ற நிலையில் இருந்த இந்தியா 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது.

அதனால் ஒருவேளை இதே பிட்ச் இந்தியாவில் இருந்திருந்தால் ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து விமர்சித்திருக்கும் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் 55க்கு ஆல் அவுட்டாகும் அளவுக்கு கேப் டவுன் பிட்ச் மோசமாக இல்லை என்று முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்புறத்தில் பும்ரா துல்லியமாக பந்து வீசி ஏற்படுத்திய அழுத்தத்தால் தமக்கு 6 விக்கெட்கள் கிடைத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முதல் நாள் காலையில் பார்த்த போது 55க்கு ஆல் அவுட்டாகக் கூடிய பிட்ச்சாக அது தெரியவில்லை. காலையில் நல்ல வெயில் அடித்ததால் நமக்கு பிட்ச் கை கொடுக்கும் என்று நான் எதிர்பார்த்து களமிறங்கவில்லை. இருப்பினும் இவை அனைத்தும் பவுலிங் பார்ட்னர்ஷிப்பை பொறுத்தது. குறிப்பாக எதிர்புறத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா தொடர்ந்து எதிரணிக்கு அழுத்தத்தை கொடுத்தார்”

இதையும் படிங்க: இந்தியாவை முடிக்க அதுவே போதும்.. இப்போவும் எங்களால் ஜெயிக்க முடியும்.. டீன் எல்கர் சவாலான பேட்டி

“அவர் நிறைய விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும் பெரிய அழுத்தத்தை உருவாக்கினார். இது போல பவுலிங்க்கு கை கொடுக்கும் மைதானங்களில் நாம் அவுட் ஸ்விங்கர் பந்துகளை வீசலாம் என்பது போன்ற நிறைய திட்டங்களை பவுலர்கள் நினைப்பார்கள். ஆனால் நீங்கள் இங்கே ஒரு லைனை மட்டுமே பின்பற்ற வேண்டும். ஏனெனில் நீங்கள் பலவற்றை பின்பற்றினால் குழப்பமடைந்து விடுவீர்கள்” என்று கூறினார்.

Advertisement