அந்த 2 பேர் இல்ல.. தெ.ஆ மண்ணில் ஜெய்க்க இந்தியாவுக்கு இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது.. கவாஸ்கர் அறிவுரை

Sunil Gavaskar 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை சமன் செய்து அடுத்ததாக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்று அசத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக இவ்விரு அணிகளும் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 26ஆம் தேதி துவங்க உள்ளது.

அதில் இம்முறை எப்படியாவது தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி விட வேண்டும் என்ற லட்சியத்துடன் இந்தியா களமிறங்க உள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் ஆசிய கண்டத்திற்கு வெளியே சவாலான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளில் வரலாற்றில் குறைந்தது ஒரு தொடரையாவது வென்றுள்ள இந்திய அணி தென்னாபிரிக்க மண்ணில் மட்டும் 1992 முதல் இதுவரை வரலாற்றில் ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது.

- Advertisement -

கவாஸ்கர் அறிவுரை:
குறிப்பாக 2010/11இல் தோனி தலைமையில் போராடி 1 – 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்த இந்தியா கடைசியாக 2021/22இல் விராட் கோலி தலைமையில் 2 – 1 (3) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் 2017/18 மற்றும் 2021/22 ஆகிய சீசன்களில் தலா 1 வெற்றிகளைப் பெற்றதால் தென்னாப்பிரிக்காவை தோற்கடிப்பதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை இந்தியா தவற விட்டதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இம்முறை ககிஸோ ரபாடா, அன்றிச் நோர்ட்ஜே ஆகிய 2 முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களும் காயத்தால் விலகியுள்ளது தென்னாப்பிரிக்கா அணியை பலவீனமடைய வைத்துள்ளதாக தெரிவிக்கும் கவாஸ்கர் இந்தியா வெற்றி பெறுவதற்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது என கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இப்போதைய தென்னாப்பிரிக்கா அணி ரபாடா, நோர்ட்ஜே ஆகிய 2 முக்கிய பவுலர்கள் இல்லாமல் இருக்கிறது”

- Advertisement -

“அதன் காரணமாக தற்போதைய இந்திய பேட்டிங் வரிசை சாதுர்யமாக விளையாடி 400 – 450 ரன்களை பெரிய பிரச்சனைகள் இல்லாமல் எடுக்க முடியும். ஆம் இப்போதும் புதிய பந்தில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் என்பதால் ஆரம்பத்தில் உங்களுக்கு சிரமம் இருக்கும். ஆனால் அது தான் டெஸ்ட் கிரிக்கெட். 5 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் நீங்கள் 300 – 500 ரன்கள் அடித்தால் கண்டிப்பாக தென்னாப்பிரிக்காவை தோற்கடிப்பதற்கான நல்ல வாய்ப்பை பெறுவீர்கள்”

இதையும் படிங்க: ஐ.பி.எல் 2024 : 14 கோடிக்கு மேல் ஏலத்தில் செல்லப்போகும் 2 வீரர்கள் இவங்க தான் – ரவிச்சந்திரன் அஷ்வின் கணிப்பு

“2018இல் இந்தியா வெல்லும் என்று நினைத்தேன். அதே போல 2 வருடங்களுக்கு முன்பாகவும் வெல்வதற்கான பெரிய வாய்ப்பை இந்தியா தவற விட்டது. இதுவே அவர்களுக்கான சிறந்த நேரம் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். இதைத்தொடர்ந்து இம்முறை ரோகித் சர்மா தலைமையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்த இந்தியா போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement