ஐ.பி.எல் 2024 : 14 கோடிக்கு மேல் ஏலத்தில் செல்லப்போகும் 2 வீரர்கள் இவங்க தான் – ரவிச்சந்திரன் அஷ்வின் கணிப்பு

Ashwin-Auction
- Advertisement -

இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று ஆண்டுதோறும் வெற்றிகரமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது இதுவரை 16 சீசன்களை நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்த ஆண்டிற்கான 17-வது சீசன் அடுத்த கோடை காலத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் வீரர்களின் மினி ஏலமானது துபாயில் டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு விலைக்கு வாங்கி தங்களது அணியை பலப்படுத்த காத்திருக்கின்றனர். அந்த வகையில் துபாயில் கோலாலமாக நடைபெற இருக்கும் இந்த ஏலத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஏலத்தில் அதிக விலைக்கு செல்லப்போகும் வீரர்கள் யார்? யார்? என்பது குறித்த கருத்துக்களை பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும், முன்னாள் வீரர்களும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் சீனியர் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் நட்சத்திர வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகப்போகும் இரண்டு வீரர்கள் குறித்த தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் அவர் ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ஆகிய இருவரும் 14 கோடியை தாண்டி செல்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அஸ்வின் வெளியிட்டுள்ள கணிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான ஷாருக் கான் 10 முதல் 14 கோடி வரைக்கும் செல்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அசத்திய நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா 4 முதல் 7 கோடி வரையும், ஹர்ஷல் பட்டேல் 7 முதல் 10 கோடி வரை செல்வார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ராவ்மன் பவல் 4 கோடி முதல் 7 கோடி வரை செல்வார் என்றும் தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளரான ஜெரால்டு கோட்சே 4-7 கோடி வரை செல்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : துபாயில் நடைபெறும் ஐ.பி.எல் ஏலத்தை நடத்தப்போகும் இந்த பெண்மணி யார்? – அதற்கான அவருடைய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அதுமட்டும் இன்றி வணிந்து ஹசரங்கா 7-10 கோடி வரை செல்வார் என்றும், உலககோப்பை நாயகன் டிராவிஸ் ஹெட் 2-4 கோடி வரை மட்டுமே செல்வார் என்றும் தனது கணிப்பினை வழங்கி உள்ளார். தொடர்ச்சியாக சமூக வலைதள பக்கத்தின் மூலம் ரசிகர்களிடம் தனது எண்ணங்களை பகிர்ந்து வரும் அஸ்வின் இம்முறை ஐபிஎல் தொடரின் ஏலம் குறித்த தனது கணிப்புகளையும் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement