துபாயில் நடைபெறும் ஐ.பி.எல் ஏலத்தை நடத்தப்போகும் இந்த பெண்மணி யார்? – அதற்கான அவருடைய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Mallika-Sagar
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக தற்போது இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை அறிவித்து விட்டது. இதன்மூலம் பல்வேறு வீரர்கள் அனைத்து அணிகளில் இருந்தும் வெளியேறியுள்ளதால் புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான ஐபிஎல் 2024-ஆம் ஆண்டிற்கான ஏலம் நடைபெற உள்ளது.

அந்த வகையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலமானது துபாயில் டிசம்பர் 19-ஆம் தேதி கொகோ-கோலா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 333 வீரர்களது பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ள வேளையில் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதோடு இந்த ஐபிஎல் ஏலத்தை நேரலையில் காணவும் ரசிகர்கள் தயாராக காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் ஏலத்தின் போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஏலத்தினை நடத்தப்போகும் பெண்மணி யார்? அந்த ஏலத்திற்காக அவர் பெறப்போகும் சம்பளம் எவ்வளவு? என்பது குறித்த விவரங்கள் வெளியாகி அனைவரது மத்தியிலும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் 48 வயதான மும்பையை சேர்ந்த “மல்லிகா சாகர்” என்கிற பெண்மணி தான் இந்த ஐபிஎல் ஏலத்தை நடத்த உள்ளார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக இந்த துறையில் வெற்றிகரமாக பயணித்து வரும் மல்லிகா சாகர் ஏற்கனவே பல்வேறு விளையாட்டு துறையை சார்ந்த ஏலத்தினை நடத்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்தியாவில் நடைபெற்று வரும் கபடி லீக், மகளிர் ஐபிஎல் தொடர் போன்றவற்றிற்கு ஏற்கனவே இவர் ஏலதாரராக பணியாற்றியுள்ளார். அதோடு ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தினை நடத்தும் முதல் பெண்மணியாகவும் இவர் உச்சம் தொட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் 2024 :துபாயில் நடைபெற இருக்கும் ஏலத்தை எந்த சேனலில் பார்க்கலாம் – ஒளிபரப்பு விவரம் இதோ

அந்த வகையில் துபாயில் நடைபெற இருக்கும் 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தை முழுமையாக நடத்தப்போகும் இவர் அந்த ஒரு நிகழ்ச்சிக்காக இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 25 லட்ச ரூபாயை சம்பளமாக பெற இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் கடந்த பல ஆண்டுகளாக ஆண்களே இந்த ஏலத்தை நடத்தி வந்த நிலையில் முதல் பெண்மணியாக இவர் இந்த ஏலத்தை முற்றிலுமாக நடத்தப்போவது அனைவரது மத்தியிலும் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement