ஐ.பி.எல் 2024 :துபாயில் நடைபெற இருக்கும் ஏலத்தை எந்த சேனலில் பார்க்கலாம் – ஒளிபரப்பு விவரம் இதோ

IPL-Auction
- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக 2024-ஆம் ஆண்டிற்கான 17-ஆவது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மினி ஏலமானது நடைபெற உள்ளது.

இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டது. இதன் காரணமாக அனைத்து அணிகளிலிருந்தும் வெளியேறிய வீரர்கள் மற்றும் புதிதாக ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பும் வீரர்கள் என அனைவரது விண்ணப்பங்களும் ஐபிஎல் நிர்வாகத்தின் மூலம் ஏற்க்கப்பட்டு ஐபிஎல் ஏலமானது நாளை நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த ஐபிஎல் மினி ஏலமானது நாளை டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ள வேளையில் இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 1116 வீரர்கள் அவர்களது பெயர்களை பதிவு செய்திருந்த வேளையில் 333 வீரர்களையே ஐபிஎல் நிர்வாகம் ஏலத்தில் பங்கேற்க உறுதி செய்துள்ளது.

இந்த 333 வீரர்களில் 214 இந்திய வீரர்களும், 119 வெளிநாட்டு வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். மொத்தம் பத்து அணியும் சேர்ந்து 77 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய இருப்பதினால் இந்த போட்டியில் மிகவும் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை அணி எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்பது குறித்து எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் ஏலத்தை தொலைக்காட்சியின் மூலம் நேரலையில் காண்பதற்கான வாய்ப்பும் நமக்கு உள்ளது. அந்த வகையில் இந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த தொலைக்காட்சியில் பார்க்கலாம்? என்பது குறித்து முழு விவரத்தையும் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி துபாயில் நாளை நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் ஏலத்தை நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

இதையும் படிங்க : ஐஎல்டி20 லீக் தொடரில் 20 மாதங்கள் அதிரடி தடை பெற்ற நவீன்-உல்-ஹக்.. அப்படி என்ன தப்பு பண்ணாரு?

அதேபோன்று மொபைல் வழியாக இந்த ஏலத்தை காண விரும்புவோர் ஜியோ சினிமாஸ் ஆப் மூலம் நேரலையில் இந்த ஏலத்தை கண்டு களிக்கலாம். மேலும் ஐபிஎல் தொடருக்கான தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், ஓடிடி உரிமையை ஜியோ சினிமாஸ் ஆப்பும் பெற்றுள்ளதால் அடுத்த ஐபிஎல் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கண்டுகளிக்கலாம். அதேபோன்று மொபைலில் காண விரும்புவோர் ஜியோ சினிமாஸ் ஆப் மூலம் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement