ஐஎல்டி20 லீக் தொடரில் 20 மாதங்கள் அதிரடி தடை பெற்ற நவீன்-உல்-ஹக்.. அப்படி என்ன தப்பு பண்ணாரு?

Naveen Ul HaqNaveen Ul Haq
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போலவே உலகின் பல்வேறு நாடுகளிலும் டி20 தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் கடந்த வருடம் தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் புதிதாக 2 டி20 தொடர்கள் துவங்கின. ஏறத்தாழ அந்த 2 தொடர்களுமே ஜனவரி மாதத்தில் நடைபெற்றதால் ரசித் கான் போன்ற நட்சத்திர வீரர்கள் 2 தொடர்களிலும் விளையாட முடியாத நிலைமையை சந்தித்தனர்.

அந்த வகையில் துபாயில் நடைபெற்ற 2023 ஐஎல்டி20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த நவீன்-உல்-ஹக் கடந்த சீசனில் சார்ஜா வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். இதைத் தொடர்ந்து அந்த தொடரின் 2வது சீசன் வரும் 2024 ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற உள்ளது.

- Advertisement -

20 மாதங்கள் தடை:
அதில் விளையாடுவதற்கு தயாராக இருங்கள் என்று சார்ஜா வாரியர்ஸ் அணி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதில் கையெழுத்திட முடியாது என்று நவீன்-உல்-ஹக் மறுப்பு தெரிவித்து விட்டார். அதன் காரணமாக ஐஎல்டி20 தொடரில் அடுத்த 20 மாதங்கள் நவீன் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக ஐக்கிய அரபு நாடுகள் வாரியம் அறிவித்துள்ளது.

அதாவது முதல் சீசனில் வாங்கிய போதே குறிப்பிட்ட சில வருடங்களுக்கு விளையாட வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் நவீன் கையெழுத்திட்டுள்ளார். தற்போது அதை மீறியுள்ளதால் அவருக்கு இந்த தடை விதிக்கப்படுவதாக ஐஎல்டி20 நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மறுபுறம் அந்த விதிமுறையை மீறிய நவீன் அதே ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள 2024 எஸ்ஏ டி20 தொடரில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கிளையான டர்பன் அணியில் ஐஎல்டி20 தொடரில் கொடுக்கப்படும் சம்பளத்தை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதனால் விதிமுறைகளை மீறினாலும் பரவாயில்லை ஐஎல்டி20 தொடருக்கு பதிலாக தென்னாபிரிக்க டி20 தொடரில் விளையாடுவோம் என்ற முடிவை நவீன் எடுத்ததே இந்த தடை பெறுவதற்கான பின்னணி காரணமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: தோனிக்கு நிகரான ரோஹித்.. அந்த 3 பேரை சமாளிக்கனும்.. இனிமேல் பாண்டியா திணறப் போறாரு.. பதான் ஓப்பன்டாக்

முன்னதாக ஐபிஎல் 2023 தொடரில் விராட் கோலியுடன் சண்டை போட்ட நவீனுக்கு இந்திய ரசிகர்கள் சென்ற இடங்களில் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவ்வாறு செய்யாதீர்கள் என்று விராட் கோலி நேரடியாக கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து தற்போது ரசிகர்கள் நவீனை திட்டுவதை நிறுத்தியுள்ளார்கள். அத்துடன் இப்படி பணத்துக்காக டி20 தொடரில் விளையாடுவதற்காகவே 24 வயதில் ஒருநாள் போட்டிகளிலிருந்து 2023 உலகக் கோப்பையுடன் நவீன் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement