தோனிக்கு நிகரான ரோஹித்.. அந்த 3 பேரை சமாளிக்கனும்.. இனிமேல் பாண்டியா திணறப் போறாரு.. பதான் ஓப்பன்டாக்

Irfan Pathan 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்று அறிவித்தது அனைவரிடமும் பெரிய ஏமாற்றத்தையும் ரசிகர்களிடம் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

ஏனெனில் சச்சின், பாண்டிங் போன்ற ஜாம்பவான்களால் கூட வெல்ல முடியாத கோப்பையை 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே மும்பைக்கு வென்று கொடுத்த ரோஹித் சர்மா 2020க்குள் மொத்தம் 5 கோப்பைகளை வென்று குறுகிய காலத்திலேயே வெற்றிகரமான அணியாக ஜொலிக்க வைத்தார். அதனால் இன்று இந்தியாவின் கேப்டனாகவும் அளவுக்கு வளர்ச்சியையும் அனுபவத்தையும் கொண்டுள்ள அவர் கடைசி வரை மும்பை வழி நடத்துவார் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர்.

- Advertisement -

எப்படி மனசு வந்துச்சு:
ஆனால் கோடிகளை கொடுத்தாலும் கோப்பையை வெல்ல முடியாமல் திணறும் பல அணிகளுக்கு மத்தியில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா மீதான நன்றி மறந்த மும்பையை இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்வதை நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தோனிக்கு நிகரான அந்தஸ்தை கொண்ட ரோகித் சர்மாவை மும்பை கழற்றி விட்டது பெரிய ஏமாற்றத்தை கொடுத்ததாக இர்ஃபான் ப்தான் கூறியுள்ளார்.

மேலும் ரோஹித், பும்ரா, சூரியகுமார் ஆகிய 3 சீனியர்கள் இந்தியாவுக்காக கேப்டனாக செயல்பட்டதால் அவர்களை தற்போது ஒருங்கிணைத்து ஐபிஎல் தொடரில் மும்பையை வழி நடத்துவது பாண்டியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தெரிவிக்கும் இர்பான் பதான் இது பற்றி பேசியது பின்வருமாறு. “மும்பை அணியில் ரோகித் சர்மா மிகப்பெரிய மதிப்பை கொண்டுள்ளார். குறிப்பாக சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனி கொண்டிருக்கும் அதே மதிப்பை மும்பையில் ரோகித் சர்மா கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன்”

- Advertisement -

“மும்பை அணியை ரோகித் சர்மா வியர்வையையும் உழைப்பையும் சிந்தி உருவாக்கியவர். அணி மீட்டிங்கில் தவறாமல் இருக்கக்கூடிய அவர் பவுலர்களுக்கு ஆதரவு கொடுக்கக்கூடிய அபாரமான கேப்டன். கடந்த வருடம் பும்ரா, ஆர்ச்சர் இல்லாமலேயே ரோகித் சர்மா மும்பையை பிளே ஆஃப் வரை அழைத்துச் சென்றார். தற்போது சூரியகுமார் யாதவ், பும்ரா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார்கள்”

இதையும் படிங்க: 6 பந்துகளால் நேர்ந்த பரிதாபம்.. ஐசிசி தண்டனையால் இந்தியாவை.. தொட முடியாத நிலைக்கு சென்ற பாகிஸ்தான்

“எனவே அவர்களை ஒருங்கிணைத்து மும்பையை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வது பாண்டியாவுக்கு பெரிய சவாலாக இருக்கும். அது எளிதாக இருக்காது” என்று கூறினார். அவர் கூறுவது போல குஜராத்தை விட மும்பை அணியில் அதிக நட்சத்திர அந்தஸ்தும் ரசிகர்களும் இருப்பதால் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பாண்டியா வெற்றிகரமாக செயல்படுவது கடினமாக இருக்கும் என்றால் மிகையாகாது.

Advertisement