அதை மட்டும் செஞ்சா போதும்.. உங்களோட ஸ்டார்ட் முக்கியம்.. இந்திய வீரருக்கு கவாஸ்கர் அட்வைஸ்

Sunil Gavaskar 5
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள இத்தொடரில் ரோஹித் தர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் அடங்கிய இந்திய அணி விளையாட உள்ளது.

எனவே 1992 முதல் இதுவரை தென்னாபிரிக்க மண்ணில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இம்முறை முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதனை படைக்குமா என்ற வழக்கமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. பொதுவாகவே பேட்டிங் செய்வதற்கு சவாலான தென்னாப்பிரிக்க மண்ணில் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி சவாலை கொடுப்பார்கள்.

- Advertisement -

கவாஸ்கர் அறிவுரை:
எனவே துவக்க வீரர்கள் அவர்களை சிறப்பாக எதிர்கொண்டு பெரிய ரன்கள் குவிப்பதற்கான நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பது வெற்றிக்கு அவசியமாக பார்க்கப்படுகிறது. அந்த சூழ்நிலையில் கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிரடியான சதமடித்து சாதனை படைத்த யசஸ்வி ஜெய்ஸ்வால் இத்தொடரில் ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இத்தொடரில் புதிய பந்துகளை திடமாக எதிர்கொண்டு முதல் 10 – 12 ஓவர்களை கடந்து விட்டால் பின் உங்களால் எளிதாக நல்ல ரன்களை குவிக்க முடியும் என்று ஜெய்ஸ்வாலுக்கு ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடர் அவருக்கு நல்ல சோதனையாக இருக்கப் போகிறது”

- Advertisement -

“ஆனால் இங்குள்ள சூழ்நிலைகளிலும் அசத்தக்கூடிய திறமை அவரிடம் இருப்பதாக நான் நம்புகிறேன். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தனது தலையை நேராக வைத்து பந்தை தாமதமாக அடித்தாலும் லைனை நன்றாக பிடித்து விளையாடுகிறார். அவர் பந்தை அடிப்பதற்கு அவசரப்படுவதில்லை. களத்தில் நேரம் எடுத்துக்கொண்டு விளையாடும் அவர் பந்தை தாமதமாக அடிக்கிறார். எனவே இதைத் தான் ஜெயஸ்வால் தமக்கு தானே சொல்லிக் கொள்வார்”

இதையும் படிங்க: இந்த மேட்ச் அவோரோட கேரியரையே மாத்த போகுது.. இந்திய வீரரை பாராட்டிய சுனில் கவாஸ்கர்

“அதாவது முதல் 10 – 12 ஓவர்களில் தாக்குப்பிடித்து விளையாட முடிந்தால் நீங்கள் கண்டிப்பாக பெரிய ரன்களை அடிக்க முடியும்” என்று கூறினார். இதை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் கிறிஸ்மஸ் தினத்திற்கு அடுத்த நாளான பாக்ஸிங் டேவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement