இந்த மேட்ச் அவோரோட கேரியரையே மாத்த போகுது.. இந்திய வீரரை பாராட்டிய சுனில் கவாஸ்கர்

Sunil Gavaskar 4
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பைக்கு பின் தென்னாபிரிக்க மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. குறிப்பாக ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல் கே.எல் ராகுல் தலைமையில் இளம் வீரர்களுடன் இத்தொடரில் அசத்திய இந்திய அணி 2018குப்பின் வரலாற்றில் 2வது முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்று சாதனையும் படைத்தது.

முன்னதாக பார்ல் நகரில் நடைபெற்ற இத்த தொடரின் 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதமடித்து 108, திலக் வர்மா 52 ரன்கள் குவித்தனர். அதனால் இந்தியா நிர்ணயித்த 297 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா சுமாராக விளையாடி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

கவாஸ்கர் நம்பிக்கை:
அந்த அணிக்கு அதிகபட்சமாக டோனி டீ ஜோர்சி 81 ரன்கள் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் 3 விக்கெட்கள் சாய்த்து 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்து முக்கிய பங்காற்றிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 2015இல் இந்தியாவுக்காக அறிமுகமாகி 2021இல் ஒருநாள் போட்டியில் விளையாட துவங்கிய அவர் ஒரு வழியாக இப்போட்டியில் சதமடித்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில் இந்த சதம் சஞ்சு சாம்சனின் கேரியரை மாற்றலாம் என்று தெரிவிக்கும் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதற்கான காரணம் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்த இன்னிங்சில் அவரின் ஷாட் செலக்சன் என்னை மிகவும் கவர்ந்தது. இன்று அவர் மீது நீங்கள் குறை சொல்ல முடியாத அளவுக்கு விளையாடினார். தமக்கான நேரத்தை எடுத்துக் கொண்ட அவர் மோசமான பந்துகளுக்காக காத்திருந்து சதமடித்தார்”

- Advertisement -

“இந்த சதம் அவருடைய கேரியரை மாற்றப் போகிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்த சதத்தால் அவருக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். 2வதாக இந்த லெவலில் தம்மால் அசத்த முடியும் என்று அவரும் நம்பிக்கை வைக்கத் துவங்குவார். சில நேரங்களில் நீங்கள் நீண்ட காலம் விளையாடினாலும் அதிர்ஷ்டம் இருக்காது”

இதையும் படிங்க: தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தியதால் 2 சர்வதேச வீரர்கள் சஸ்பெண்ட் – கிரிக்கெட் நிர்வாகம் அதிரடி

“குறிப்பாக அபாரமான கேட்ச், சிறப்பான பந்தால் அவுட்டாகும் போது நீங்கள் சர்வதேச அளவில் விளையாடுவதற்கு தகுதியானவரா என்ற சந்தேகம் உங்களுக்கே வரும். எனவே இந்த சதம் அவருக்கு இப்போதிலிருந்து நிறைய தன்னம்பிக்கையை கொடுக்கும். அவருடைய திறமை பற்றி நாம் அறிவோம். இருப்பினும் நீண்ட காலங்களாக தடுமாறி வந்த அவர் இன்று ஒரு வழியாக தம்முடைய திறமையை மற்றவருக்கு மட்டுமல்லாமல் தமக்கும் காண்பித்துள்ளார்” என்று கூறினார்.

Advertisement