தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தியதால் 2 சர்வதேச வீரர்கள் சஸ்பெண்ட் – கிரிக்கெட் நிர்வாகம் அதிரடி

Zimbabwe
- Advertisement -

அயர்லாந்து அணிக்கெதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வே அணியானது பங்கேற்று விளையாடியது. இந்நிலையில் இந்த தொடரின் போது தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தியதாக ஜிம்பாப்வே அணியை சேர்ந்த இரண்டு வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த ஆலரவுண்டர்களான வெஸ்லி மதவீரா மற்றும் பிரன்டன் மவுடா ஆகிய இருவரும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதாக சோதனையின் முடிவில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் போதைப் பொருளை உட்கொண்டதற்காக எடுக்கப்பட்ட சோதனையில் அவர்கள் இருவருக்கும் பாசிட்டிவாக ரிசல்ட் வந்துள்ளதால் ஊக்க மருந்து எதிர்ப்பு விதிகளை மீறி நடந்து கொண்டதாக அவர்கள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

23 வயதான வெஸ்லி மதவீரா 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்காக ஸ்டார் வீரராக விளையாடியிருந்தார். இதுவரை 98 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் மிகச் சிறப்பான வீரராக இருந்து வருகிறார். அதோடு அயர்லாந்து அணிக்கிறதாக நடைபெற்ற மூன்று டி20 போட்டிகளில் அவர் பங்கேற்றிருந்தார்.

- Advertisement -

அதேபோல 26 வயதான பிரெண்டன் மவுதா ஜிம்பாப்வே அணிக்காக 26 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். வளர்ந்து வரும் நட்சத்திர ஆல்ரவுண்டர்களாக பார்க்கப்படும் இவர்கள் இருவரும் செய்த குற்றம் குறித்து ஜிம்பாவே கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் : வெஸ்லி மதவீரா மற்றும் மவுடா இருவரும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையின் போது போட்டிக்கு முன்னதாக தடை செய்யப்பட்ட பொழுதுபோக்கு மருந்தை எடுத்துக் கொண்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உங்க பையனை யாரும் ஏலத்துல எடுக்கலனா.. நாங்க அவனை சி.எஸ்.கே அணியில எடுப்போம் – தோனி அளித்த வாக்குறுதி

இதன் காரணமாக அவர்கள் இருவரும் ஒழுங்கு விசாரணைக்கு ஆஜராகும் வரை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணைக்கு பிறகே அவர்களது தண்டனை குறித்த உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement