உங்க பையனை யாரும் ஏலத்துல எடுக்கலனா.. நாங்க அவனை சி.எஸ்.கே அணியில எடுப்போம் – தோனி அளித்த வாக்குறுதி

MS-Dhoni-and-Minz
- Advertisement -

கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் 10 அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் தேர்ந்தெடுத்து தங்களது அணியில் இணைத்தனர். இந்த ஏலத்தில் வெளிநாட்டை சேர்ந்த சில வீரர்கள் கோடிகளில் ஏலத்தில் சென்று ஆச்சரியப்படுகிறார். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் ஐபிஎல் வரலாற்றில் 20 கோடிக்கு மேல் சென்ற வீரர்களாக சாதனை படைத்தனர்.

அதேபோன்று இந்த ஏலத்தில் இந்திய அணிக்காக விளையாடாத உள்ளூர் வீரர்கள் சிலரும் கோடிகளில் சென்றது அனைவரது மத்தியிலும் கவனத்தை வைத்தது. அந்த வகையில் சிஎஸ்கே அணி சார்பாக சமீர் ரிஸ்வி என்கிற வீரரை 8 கோடியை 40 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அதேபோன்று ராஜஸ்தான் அணி சார்பாக சுபம் துபே 5 கோடியே 80 லட்சம் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இதேபோன்று உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஒரு 21 வயது வீரரை குஜராத் அணி 3 கோடியே 60 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது குறித்த சுவாரசிய தகவல் தான் இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில் 21 வயதான ராபின் மின்ஸ் என்பவர் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் வசித்து வருகிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள விமான நிலையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் பிரான்சிஸ் மின்ஸ் என்பவரின் மகனான ராபின் மின்ஸ் சிறுவயதிலேயே கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தினால் தொடர்ச்சியாக கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரான ராபின் மின்ஸ்-சின் தந்தை ஆயுதப்படையில் வேலை செய்வதன் காரணமாக ராஞ்சிக்கு குடி பெயர்ந்தார். தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் கிரிக்கெட் விளையாடி வரும் பிரான்சி மின்ஸ்ஸின் மகன் ராபின் மின்ஸ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனியை போன்றே மிகவும் சிறப்பான வீரராக இருந்து வருகிறார்.

- Advertisement -

மேலும் தோனியின் சிறு வயது பயிற்சியாளரான பட்டாச்சாரியாவிடமே ராபினும் பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் குஜராத் அவரை ஏலத்தில் எடுத்திருந்தாலும் இந்த ஏலத்திற்கு முன்பாக தோனி கூறிய சில வார்த்தைகளை தற்போது ராபின் மின்சின் தந்தை பிரான்சிஸ் மின்ஸ் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் பிரான்சிஸ் மின்ஸ் கூறுகையில் : சமீபத்தில் நான் தோனியை விமான நிலையத்தில் பார்த்தேன். அப்போது அவர் என்னிடம் வந்து :

இதையும் படிங்க : களத்தில் சாகசம் நிகழ்த்திய சாய் சுதர்சன்.. திறமைக்கு ஸ்பெஷல் விருதை பரிசளித்த இந்திய அணி நிர்வாகம்

“பிரான்சிஸ் ஜி, உங்கள் மகனை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை என்றால் நிச்சயம் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தார். இப்படி 21 வயதான இளம் வீரரின் மீது நம்பிக்கை வைத்து அணியில் எடுத்துக் கொள்வோம் என்று தோனியே கூறியதால் நிச்சயம் இவர் திறமையான வீரர் தான் என்றும் குஜராத் அணிக்காக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதுமே ரசிகர்களிடம் தற்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement