களத்தில் சாகசம் நிகழ்த்திய சாய் சுதர்சன்.. திறமைக்கு ஸ்பெஷல் விருதை பரிசளித்த இந்திய அணி நிர்வாகம்

Sai Sudharsan Fielding
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. குறிப்பாக விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கிய இந்தியா 2018க்குப்பின் சவாலான தென்னாப்பிரிக்க மண்ணில் வரலாற்றில் 2வது முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதனையும் படைத்தது.

முன்னதாக இந்த தொடரில் அறிமுகமாக களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் முதல் போட்டியில் 55 ரன்கள் அடித்து இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். அதை தொடர்ந்து 2வது போட்டியில் 62 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் நவ்ஜோத் சித்துவுக்கு (1987இல்) பின் தனது முதல் 2 போட்டிகளில் அரை சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

- Advertisement -

திறமைக்கு விருது:
அந்த நிலையில் டிசம்பர் 21ஆம் தேதி பார்ல் நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு 10 ரன்களில் அவுட்டாகி சாய் சுதர்சன் ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் சஞ்சு சாம்சன் சதமடித்து 108, திலக் வர்மா 52 ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா 297 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு டோனி டீ ஜோர்சி 81 ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுத்த தவறியதால் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதனால் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியாவுக்கு அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 4 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக அப்போட்டியில் 141/3 என்ற ஓரளவு நல்ல நிலையில் தென்னாபிரிக்கா இருந்த போது களமிறங்கிய நட்சத்திர வீரர் ஹென்றிச் க்ளாஸென் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரியுடன் 21 (22) ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுத்தார்.

- Advertisement -

அப்போது ஆவேஷ் கான் வீசிய 33வது ஓவரின் 2வது பந்தை குறைந்த வேகத்தில் வருவதை தவறாக கணித்த க்ளாஸென் தூக்கி அடித்தார். இருப்பினும் வேகம் குறைவாக இருந்ததால் கேட்ச்சாக மாறிய அந்த பந்தை ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த சாய் சுதர்சன் ஓடி வந்து தாவி தரையோடு தரையாக அபாரமாக பிடித்து அவுட்டாக்கினார். குறிப்பாக கிட்டத்தட்ட தரையில் படுவதற்காக சென்ற பந்தை சரியான நேரத்தில் தம்முடைய கைகளை உள்ளே விட்டு அவர் தாவி பிடித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: வருங்கால இடது கை பவுலராக.. லெஜெண்ட் ஜஹீர் கானின் 12 வருட சாதனையை தகர்த்த அர்ஷ்தீப் சிங்

அந்த வகையில் இந்த தொடரிலேயே மிகவும் அபாரமான கேட்ச்சை பிடித்ததற்காக இத்தொடரின் “இம்பேக்ட் ஃபீல்டர்” எனும் விருதை போட்டியின் முடிவில் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் சாய் சுதர்சனுக்கு வழங்கினார். 2023 உலகக் கோப்பையில் சிறந்து வழங்கும் ஃபீல்டர்களை உத்வேகப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருது விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களை தொடர்ந்து தற்போது சாய் சுதர்சன் கழுத்தில் ஜொலிப்பது தமிழக ரசிகர்களை பெருமடைய வைத்துள்ளது.

Advertisement