வருங்கால இடது கை பவுலராக.. லெஜெண்ட் ஜஹீர் கானின் 12 வருட சாதனையை தகர்த்த அர்ஷ்தீப் சிங்

Arshdeep Singh 3
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தியது. குறிப்பாக முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளை பெற்றதால் சமனில் இருந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பார்ல் நகரில் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சஞ்சு சாம்சன் 108, திலக் வர்மா 52 ரன்கள் எடுத்த உதவியுடன் 297 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு துவக்க வீரர் டோனி டீ ஜோர்சி நன்றாக விளையாடி 81 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரை தவிர்த்து இதர வீரர்கள் சுமாராக விளையாடியதால் 45.4 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அர்ஷிதீப் சாதனை:
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 4, வாசிங்டன் சுந்தர் 2, ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதன் வாயிலாக 2018க்குப்பின் 2வது முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு 3 போட்டிகளில் மொத்தம் 10 விக்கெட்களை எடுத்து முக்கிய பங்காற்றிய அர்ஷ்தீப் சிங் தொடர்நாயகன் விருதை வென்றார்.

இதன் வாயிலாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு குறிப்பிட்ட ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்டுகளை (10) எடுத்த இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்ற ஜஹீர் கானின் 12 வருட சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2011ஆம் ஆண்டு தோனி தலைமையில் தென்னாபிரிக்க மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய போது ஜாம்பவான் ஜாஹீர் கான் அதிகபட்சமாக 9 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

மேலும் 2வது போட்டியில் மட்டுமே 5 விக்கெட்டுகள் எடுத்த அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையும் படைத்தார். உள்ளூர் மற்றும் அண்டர்-19 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதால் கடந்த வருடம் இந்தியாவுக்காக அறிமுகமான அர்ஷிதீப் சிங் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: 331 ரன்ஸ் வெறித்தனமாக போராடிய இங்கிலாந்து வீரர் உலக சாதனை.. நடப்பு சாம்பியனை வீழ்த்திய வெ.இ வெற்றி

இருப்பினும் அதன் பின் டி20 கிரிக்கெட்டில் நோ-பால்களை போட்டு தள்ளி ரண்களை வாரி வழங்கிய அவர் சமீப காலங்களில் தடுமாறி வந்தார். அந்த சூழ்நிலையில் சவாலான தென்னாப்பிரிக்க மண்ணில் இந்த சாதனையை படைத்துள்ள அவர் இந்தியாவையும் வெற்றி பெற வைத்து ஜஹீர் கான் வரிசையில் வருங்காலத்தில் அசத்தப்போகும் இடது கை வேகப்பந்து வீச்சாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement