331 ரன்ஸ் வெறித்தனமாக போராடிய இங்கிலாந்து வீரர் உலக சாதனை.. நடப்பு சாம்பியனை வீழ்த்திய வெ.இ வெற்றி

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி தோல்வியை சந்தித்த ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்த வெஸ்ட் இண்டீஸ் 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத வீழ்ச்சியிலிருந்து கம்பேக் கொடுத்து அசத்தியது.

அதைத் தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகளும் 5 கொண்ட டி20 தொடரில் மோதின. அதில் முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றதால் சமனில் இருந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டி டிசம்பர் 22ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் நடைபெற்றது.

- Advertisement -

உலக சாதனை வீண்:
அந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்ப முதலே அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் பிலிப் சால்ட் 38, லியம் லிவிங்ஸ்டன் 28 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து 133 என்ற சுலபமான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ப்ரெண்டன் கிங் 3, நிக்கோலஸ் பூரான் 10 ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் இலக்கு குறைவாக இருந்ததால் ஜான்சன் சார்லஸ் 27 (22) ரூத்தர்போர்ட் 30 (24) சாய் ஹோப் 43* (43) ரன்கள் எடுத்த உதவியுடன் 19.2 ஓவரிலேயே 133/6 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.

- Advertisement -

அதனால் 3 – 2 (5) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அடுத்த வருடம் தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இருக்கிறோம் என்பதை உலக அணிகளுக்கு காண்பித்து ஃபார்முக்கு திரும்பியுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் குறைந்த ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்துக்கு ரீஸ் டாப்லி, அடில் ரசித் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவுசெய்த பின்னர் சஞ்சு சாம்சனின் – இந்த செலிப்ரேஷனை கவனிச்சீங்களா?

அதனால் 2022 டி20 உலகக் கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இருக்கும் அந்த அணி இத்தொடரில் தோல்வியை சந்தித்து ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. இருப்பினும் இத்தொடரில் 5 போட்டிகளில் சேர்த்து 2 சதங்கள் உட்பட 331 ரன்களை 82.75 அபாரமான சராசரியில் 185.95 என்ற வெறித்தனமான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து போராடிய இங்கிலாந்து வீரர் பிலிப்ஸ் சால்ட் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்து தொடர்நாயகன் விருதை வென்றார். இதற்கு முன் 2022இல் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 316 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement