சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவுசெய்த பின்னர் சஞ்சு சாம்சனின் – இந்த செலிப்ரேஷனை கவனிச்சீங்களா?

Samson-Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் கடந்த 2015-ஆம் ஆண்டே இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாகவே நிரந்தர இடத்திற்காக போராடி வருகிறார். குறிப்பாக கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே அவ்வப்போது வாய்ப்பினை பெற்று வரும் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடினாலும் அணியில் இருந்து முக்கிய தொடர்களில் கழட்டிவிடப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் முடிந்த கையோடு தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

அந்த வகையில் இந்த ஒருநாள் தொடருக்கான முதலாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயனப்டுத்திய அவர் நடைபெற்று முடிந்த மூன்றாவது போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான இந்த மூன்றாவது போட்டியில் 114 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 108 ரன்கள் குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதலாவது ஒருநாள் சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டை பொருத்தவரை பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் அட்டகாசமாக செயல்பட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது முதலாவது சதத்தை அடித்து சாம்சன் தனது கிளாஸை நிரூபித்துள்ளார். இந்நிலையில் இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்த பின்னர் அந்த சதத்தை சாம்சன் கொண்டாடிய விதம் தான் தற்போது பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : 296 ரன்களை சேசிங் செய்ய முடியும்னு தான் நெனச்சேன். ஆனா இந்திய அணியிடம் நாங்க தோக்க இதுவே காரணம் – மார்க்ரம் பேட்டி

ஏனெனில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சிறிது இடைவெளிக்கு பிறகு சதம் அடித்தால் தனது கையை மடக்கி பலத்தை காண்பிப்பது போல் வித்தியாசமாக சதத்தை கொண்டாடுவார். அதேபோன்று தற்போது சஞ்சுவும் பல ஆண்டுகள் காத்திருந்து அடித்த இந்த சதத்திற்கு பின்னர் தனக்கும் பலம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த சதத்தை கொண்டாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement