296 ரன்களை சேசிங் செய்ய முடியும்னு தான் நெனச்சேன். ஆனா இந்திய அணியிடம் நாங்க தோக்க இதுவே காரணம் – மார்க்ரம் பேட்டி

Markram
- Advertisement -

எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. ஏற்கனவே டி20 தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்திருந்த தென்னாப்பிரிக்க அணியானது இந்த ஒருநாள் தொடரை இந்திய அணியிடம் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்தது.

அதன்படி நடைபெற்ற இந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த வேளையில் நேற்று மூன்றாவதாக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்தது. பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு தென் ஆப்பிரிக்கா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கடினமான இந்த இலக்கினை துரத்திய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 218 ரன்களுக்கு சுருண்டதால் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் கூறுகையில் :

- Advertisement -

நாங்கள் இந்த தொடரில் நல்ல நிலையில் இருந்ததாகவே உணர்கிறேன். அதேபோன்று ஒவ்வொரு தொடரின் போதும் முடிவை தீர்மானிக்கும் போட்டி நடைபெறும் போது சிறப்பாக இருக்கும். இந்த தொடரின் முடிவு தீர்மானிக்கும் இந்த போட்டியின் போதும் மைதானம் முழுவதுமாக ரசிகர்கள் நிரம்பி சிறப்பான ஆதரவினை வழங்கி இருந்தனர். ஆனால் எங்களால் இந்த போட்டியில் வெற்றி பெற முடியாமல் போனது.

இதையும் படிங்க : நான் நம்ம பசங்க கிட்ட சொன்னது இதுமட்டும் தான்.. ஒருநாள் தொடரை கைப்பற்றிய பின்னர் – கே.எல் ராகுல் மகிழ்ச்சி

இருந்தாலும் நாங்கள் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவே நினைக்கிறேன். இந்த மைதானத்தில் 290 ரன்களை எளிதாக சேசிங் செய்யலாம் என்று நினைத்தோம். ஆனால் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர். அவர்களின் சிறப்பான பந்துவீச்சே எங்களது தோல்விக்கு காரணம். எதிர்வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக மார்க்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement