- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தமிழகத்தின் முரளி விஜய் மாதிரி ராகுல் இதை செய்றாரு.. மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் கத்துக்கணும்.. கவாஸ்கர் அட்வைஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் 2வது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்தது. அடுத்ததாக காபாவில் நடைபெறும் 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் 101, டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்த உதவியுடன் 446 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்ததாக விளையாடும் ஆஸ்திரேலியா 4வது நாள் முடிவில் 252-9 ரன்கள் எடுத்து குறைந்தபட்சம் ஃபாலோ ஆனை தகர்த்துள்ளது. இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 4, கில் 1, விராட் கோலி 3, ரிஷப் பண்ட் 9, கேப்டன் ரோஹித் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் ராகுல் 84, ஜடேஜா 77 ரன்கள் குவித்து முழுமூச்சுடன் போராடினார்கள்.

- Advertisement -

அபாரமான ராகுல்:

கடைசியில் பும்ரா 10*, ஆகாஷ் தீப் 27* ரன்கள் குவித்து இந்தியாவின் மானத்தை ஓரளவு காப்பாற்றி களத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் வெளிநாடுகளில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை அடிக்காமல் விட்டு பொறுமையுடன் விளையாடுவதில் தமிழக வீரர் முரளி விஜய் போல கேஎல் ராகுல் அசத்துவதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். அவரை விராட் கோலி உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கவாஸ்கர் மறைமுகமாக அறிவுறுத்தியுள்ளார்.

இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “இன்று எதிர்கொண்ட முதல் பந்தை தவிர்த்து அவுட் சைட் ஆஃப் பந்துகளுக்கு எதிராக ராகுலின் மதிப்பீடு அற்புதமாக இருக்கிறது. அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பகுதிகளுக்கு நெருக்கமாக வரும் அனைத்து பந்துகளையும் ராகுல் தொடர்ச்சியாக அடிக்காமல் விடுகிறார். அது மார்னஸ் லபுஸ்ஷேன் நேற்று வெளிப்படுத்திய ஆட்டத்தை எனக்கு நினைவு படுத்துகிறது”

- Advertisement -

கவாஸ்கர் பாராட்டு:

“அதற்கு முன்பாக முரளி விஜய் ஆஃப் சைட் பந்துகளை மதிப்பிடுவதில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். பொதுவாக அது போன்ற பந்துகளை நீங்கள் முன்னோக்கி சென்று அடிக்கும் முயற்சிக்கும் போது எட்ஜ் கொடுப்பதற்கு அதிகமான ரிஸ்க் எடுப்பீர்கள். ஆனால் ராகுல் பந்தை மிகவும் தாமதமாக விளையாடும் திறமையைக் கொண்டுள்ளார். அதே போல பந்தை கடைசி நேரத்தில் தவற விடுவதிலும் சரியாக செயல்படுகிறார்”

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட் யாரும் செய்யாத தனித்துவமான சாதனை செய்து வரலாறு நிகழ்த்திய – கேன் வில்லியம்சன்

“அது இந்த ஆட்டத்தில் அவருடைய திறன் மற்றும் பொறுமை ஆகியவற்றை உயர்ந்து காட்டுகிறது” என்று கூறினார். அப்படி கவாஸ்கர் பாராட்டும் அளவுக்கு அசாத்திய ராகுல் உண்மையாகவே சேனா நாடுகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை விட 2020க்குப்பின் அதிக ரன்கள் குவித்துள்ளார். இத்தனைக்கும் சமீபத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அவர் தற்போது கடினமான சூழ்நிலையில் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் மீண்டும் இடத்தைப் பிடிக்க துவங்கியுள்ளார்.

- Advertisement -