நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. அந்த வகையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கி போட்டியின் நான்காம் நாளான இன்றுடன் முடிவுக்கு வந்தது.
கேன் வில்லியம்சன் இதுவரை யாரும் நிகழ்த்தாத அசத்தல் சாதனை :
இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியினை ருசித்திருந்தது. இந்த போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் இரண்டாவது இன்னிங்ஸின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 204 பந்துகளை சந்தித்த அவர் 20 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 156 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாருமே படைக்காத சாதனை ஒன்றிணையும் நிகழ்த்தி வரலாறு படைத்துள்ளார்.
அந்த சாதனை யாதெனில் : போட்டி நடைபெறும் இந்த ஹாமில்டன் நகரில் உள்ள செடன் பார்க் மைதானத்தில் வில்லியம்சன் கடைசியாக விளையாடிய நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக நான்கு சதங்களை விளாசியிருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது ஐந்தாவது முறையாக இந்த மைதானத்தில் விளையாடிய வில்லியம்சன் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக இந்த மைதானத்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகளில் ஐந்து சதங்களை விளாசி இதுவரை யாருமே நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : அவரோடு இவரை ஒப்பிட முடியாது.. ஆனாலும் பும்ரா ரொம்பவே ஸ்பெஷல் பிளேயர் – ஆலன் பார்டர் பாராட்டு
இப்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தவொரு வீரரும் ஒரே மைதானத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற போட்டிகளில் ஐந்து சதங்களை அடித்ததில்லை. அப்படி மாபெரும் ஒரு சாதனையை நிகழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனை கேன் வில்லியம்சன் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



