அவரோடு இவரை ஒப்பிட முடியாது.. ஆனாலும் பும்ரா ரொம்பவே ஸ்பெஷல் பிளேயர் – ஆலன் பார்டர் பாராட்டு

Border
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இருந்தே அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இதுவரை 5 இன்னிங்ஸ்களில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

பும்ராவை மாதிரி ஒரு வீரரை பார்த்ததில்லை :

பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது கூட அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார். தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டை கைப்பற்றியிருந்தார்.

- Advertisement -

இந்த இன்னிங்சில் அவரது சிறப்பான பந்துவீச்சின் மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையும் நிகழ்த்தி இருந்தார். அதோடு ஆசிய கண்டத்திற்கு வெளியே அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய வெளிநாட்டு வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

இந்நிலையில் 3 வகையான சர்வதேச போட்டிகளிலும் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் அவரை போன்ற ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆலன் பார்டர் பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மால்கம் மார்சலுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் நான் இதுவரை பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொண்டதில்லை. ஆனாலும் பும்ரா எப்போது கையில் பந்து எடுத்தாலும் விக்கெட்டை எடுக்கும் வித்தியாசமான ஒரு பந்து வீச்சாளராக இருக்கிறார். அவரிடம் விக்கெட் டேக்கிங் பந்துகள் அதிகமாக இருக்கின்றன.

இதையும் படிங்க : 4 ஆவது நாள் ஆட்டத்தில் ஒரே ஓவர் வீசிய கையோடு ஹாஸ்பிட்டலுக்கு சென்ற ஜாஷ் ஹேசல்வுட் – என்ன ஆனது?

போட்டியின் எந்த நேரத்திலும், எந்த சூழலிலும் அவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது. அதுமட்டுமின்றி எந்த ஒரு பேட்ஸ்மனை அவர் ஆட்டமிழக்க வைத்தாலும் எல்லா நேரத்திலும் சிரிக்கிறார். அவரைப் போன்ற ஒரு சிறப்பான பந்துவீச்சாளரை நான் இதுவரை பார்த்ததில்லை என ஆலன் பார்டர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement