IPL 2023 : இது தேவையா? இப்போவும் சொல்றேன் உங்களால பிளே ஆஃப் போக முடியாது, இந்தியாவுக்காக அதை செய்ங்க – கவாஸ்கர் அட்வைஸ்

Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 6ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 49வது லீக் போட்டியில் மும்பையை தோற்கடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் 6வது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசிய சென்னைக்கு பதில் சொல்ல முடியாமல் 20 ஓவர்களில் 139/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 64 (51) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக மதிசா பதிரான 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Dhoni

- Advertisement -

அதை துரத்திய சென்னைக்கு டேவோன் கான்வே 44 (42) ருதுராஜ் கைக்வாட் 30 (16) சிவம் துபே 26* (18) ரகானே 21 (17) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் தேவையான ரன்களை எடுத்து 17.4 ஓவரிலேயே 2010க்குப்பின் 12 வருடங்கள் கழித்து முதல் முறையாக சேப்பாக்கத்தில் மும்பையை தோற்கடித்து வெற்றியை பெற்று கொடுத்தனர். மறுபுறம் பந்து வீச்சில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுகள் எடுத்து போராடியும் பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே 14/3 என சரிந்ததிலிருந்து மீள முடியாமல் குறைவான ரன்களை எடுத்த மும்பை பரிதாபமாக தோற்றது.

கவாஸ்கர்:
அதற்கு கடந்த போட்டியில் டக் அவுட்டானதால் இப்போட்டியில் மிடில் ஆர்டரில் விளையாடும் திட்டத்தை கையிலெடுத்த ரோஹித் சர்மா மீண்டும் டக் அவுட்டாகி முக்கிய காரணமாக அமைந்தார். சமீப காலங்களாகவே ஹிட்மேன் என்ற தனது பெயருக்கேற்றார் போல் அதிரடியாக செயல்பட முடியாமல் தடுமாறி வரும் அவர் தற்போது ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் (16 முறை) என்ற மோசமான சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் ஸ்டம்ப்புகளுக்கு அருகே நின்று தீபக் சஹரை மெதுவாக வீசுமாறு தோனி சொன்னது தெரிந்தும் சுமாரான ஃபார்மில் தவிக்கும் ரோகித் சர்மா விக்கெட் கீப்பருக்கு பின்னே குருட்டுத்தனமான ஷாட்டை அடித்து அவுட்டானதாக முன்னாள் வீரர் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

Rohit Sharma Dhoni

அதை விட புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கும் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மெடிக்கல் மிராக்கள் தான் நிகழ வேண்டும் என்பதால் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவுக்காக புத்துணர்ச்சியுடன் களமிறங்க தற்காலிக ஓய்வெடுக்குமாறு கடந்த வாரம் ஏற்கனவே தெரிவித்திருந்த கருத்தை மீண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த சமயத்தில் ரோகித் சர்மா ஓய்வெடுத்து தமக்குத் தாமே புத்துணர்ச்சியுடன் ஃபிட்டாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் களமிறங்க வேண்டும் என்று நான் சொல்வேன். வேண்டுமானால் அவர் கடைசி சில போட்டிகளில் மீண்டும் விளையாடலாம். ஆனால் இப்போதைக்கு அவர் ஓய்வெடுத்து நிம்மதி பெருமூச்சு விட வேண்டும். அந்தப் போட்டியில் அவர் முழுமையாக தன்னை ஈடுபடுத்தியதாக தெரியவில்லை. ஒருவேளை நான் தவறாக பார்க்கலாம் ஆனால் அவர் விளையாடிய ஷாட் நிச்சயமாக கேப்டனுக்குரியதல்ல. ஒரு கேப்டனாக நீங்கள் சரிந்த உங்களுடைய அணியை ஓரளவு நல்ல இன்னிங்ஸ் விளையாடி நல்ல ஸ்கோர் எடுக்க உதவ வேண்டும்”

Sunil Gavaskar

“ஆனால் நீங்கள் ஃபார்மில் இல்லாத சமயத்தில் பவர் பிளே ஓவர்களில் ஏற்கனவே 2 விக்கெட்டுகள் விழுந்திருந்தன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் ஒருவேளை நல்ல ஃபார்மில் இருந்தால் அந்த ஸ்கூப் ஷாட் அடிப்பதில் ஒரு நியாயம் இருக்கும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் கடந்த 2 போட்டியில் டக் அவுட்டான நீங்கள் அப்படி ஒரு ஷாட் விளையாடியது பெரியது”

இதையும் படிங்க:IPL 2023 : விராட் கோலிய விடுங்க, அவர் மட்டும் கேப்டனா இருந்தா இந்நேரம் ஆர்சிபி 3 கப் வாங்கிருக்கும் – வாசிம் அக்ரம் பேட்டி

“எனவே அது போன்ற சமயங்களில் நீங்கள் சிங்கிள் டபுள் ரன்களை எடுத்து பின்னர் பெரிய ரன்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த மோசமான ஃபார்மிலிருந்து திரும்புவதற்கு உங்களை ஓய்வெடுக்க சொல்கிறேன். இருப்பினும் அது அவர் மற்றும் மும்பை அணியின் முடிவாகும்” என்று கூறினார்.

Advertisement