IPL 2023 : விராட் கோலிய விடுங்க, அவர் மட்டும் கேப்டனா இருந்தா இந்நேரம் ஆர்சிபி 3 கப் வாங்கிருக்கும் – வாசிம் அக்ரம் பேட்டி

Wasim Akram RCB
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் 2023 டி20 தொடரில் கோப்பையை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள 10 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தங்களுடைய முதல் லட்சிய கனவு முதல் கோப்பையை முத்தமிடும் வெறியுடன் விளையாடி வருகிறது. கடந்த 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்டது முதல் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு 2009, 2011 சீசனங்களில் ஃபைனல் வரை சென்று முக்கிய நேரங்களில் சொதப்பி கோப்பையை நழுவ விட்ட அந்த அணி 2013 முதல் விராட் கோலி தலைமையில் 2016 சீசனில் வெறித்தனமாக விளையாடி ஃபைனலுக்கு முன்னேறியது.

Virat Kohli Shane watson RCB

- Advertisement -

ஆனால் விராட் கோலி – கிறிஸ் கெயில் ஆகியோரது ஆட்டத்தை தாண்டி மீண்டும் முக்கிய நேரத்தில் சொதப்பிய பெங்களூரு கோப்பையை ஹைதராபாத்துக்கு தாரை வார்த்தது என்றே சொல்லலாம். அப்படி காலம் காலமாகவே கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற நிறைய தரமான வீரர்கள் விளையாடியும் வெற்றி பெற முடியாத அந்த அணியால் விராட் கோலி கேப்டனாக இருக்கும் வரை கோப்பையை தொட முடியாது என்ற விமர்சனங்கள் காணப்பட்டன. அதனால் கடந்த வருடம் இந்தியாவைப் போலவே ஐபிஎல் கேப்டன் பொறுப்பையும் ராஜினாமா செய்த விராட் கோலிக்கு பின் டு பிளேஸிஸ் கேப்டனாக பொறுப்பேற்றார்.

வாசிம் அக்ரம் கருத்து:
ஆனால் அவரது தலைமையிலும் கடந்த வருடம் லீக் சுற்றில் அசத்தியும் பிளே ஆஃப் சுற்றில் வழக்கம் போல சொதப்பிய பெங்களூரு இந்த வருடமும் இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது. குறிப்பாக விராட் கோலி, டு பிளேஸிஸ் ஆகியோரை தவிர்த்து பேட்டிங்கில் யாரும் தொடர்ந்து அசத்தாத நிலையில் பவுலர்கள் வழக்கம் போல ரன் மெஷினாக பெங்களூருவின் வெற்றி தாரை வைத்து வருகின்றனர். அதன் காரணமாக சூரியன் மேற்கே உதித்தாலும் பெங்களூரு கோப்பையை வெல்லாது என்ற விமர்சனங்கள் இப்போதும் சமூக வலைதளங்களில் வலுவாக காணப்படுகின்றன.

rcbvscsk

இந்நிலையில் இந்தியாவுக்காக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று ஐபிஎல் தொடரிலும் 4 சாம்பியன் பட்டங்களை வென்று மகத்தான கேப்டனாக சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனி கேப்டனாக செயல்பட்டிருந்தால் இந்நேரம் பெங்களூரு குறைந்தது 3 கோப்பைகளை வென்றிருக்கும் என முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எம்எஸ் தோனி அவர்களின் கேப்டனாக இருந்திருந்தால் இந்நேரம் ஆர்சிபி குறைந்தது 3 கோப்பைகளை வென்றிருக்கும். ஆனால் இன்னும் ஒரு கோப்பையை கூட வெல்லாத அவர்களுக்கு அதிகப்படியான ஆதரவு இருக்கிறது. அது போக அவர்களிடம் நவீன கிரிக்கெட்டின் மகத்தான விராட் கோலி இருந்தும் துரதிஷ்டவசமாக இன்னும் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஒருவேளை தோனி பெங்களூரு அணியில் இருந்திருந்தால் நிச்சயமாக கோப்பையை வெல்ல உதவியிருப்பார். ஏனெனில் ஒரு அணியை சிறப்பாக வழி நடத்துவது தோனியின் பொழுதுபோக்காகும்”

Wasim Akram

“அதாவது கேப்டன்ஷிப் என்பது அவருடைய பழக்கமாகும். விராட் கோலியும் அதை தற்போது பழக்கமாகும் கொண்டுள்ளார். இருப்பினும் தோனி உள்ளுக்குள் இருந்தே அமைதியானவர் கிடையாது. மாறாக வெளியில் தம்மை அமைதியானவராக காட்சிப்படுத்துகிறார். அப்படி உங்களுடைய கேப்டன் மிகவும் கூலாக இருந்து தோளோடு தோளாக கை போடும் போது அந்த அணியில் விளையாடும் வீரர்கள் மிகவும் தன்னம்பிக்கை உடையவர்களாக செயல்படுவார்கள். அந்த வகையில் வீரர்களிடம் தன்னம்பிக்கையை ஆழமாக ஏற்படுத்துபவராக தோனி அறியப்படுகிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:16 வருஷமா ஐ.பி.எல் ஆடுறாரு. அவர்கூட ஆடுறதால நான் நெறைய கத்துக்குறேன் – ஆட்டநாயகன் சுப்மன் கில் பேட்டி

அவர் கூறுவது போல 15 வருடங்கள் பெங்களூருவை கேப்டனாக வழி நடத்தியிருந்தால் நிச்சயமாக இந்நேரம் ஒரு கோப்பையாவது தோனி வென்று கொடுத்திருப்பார். குறிப்பாக பெங்களூரு அணியில் சுமாராக செயல்பட்ட மொய்ன் அலி, ஷேன் வாட்சன், சிவம் துபே போன்ற வீரர்கள் அவரது தலைமையில் சென்னை அணியில் அசத்தினார்கள் என்பதே அது நிச்சயம் நடந்திருக்கும் என்று சொல்வதற்கான சான்றாகும்.

Advertisement