16 வருஷமா ஐ.பி.எல் ஆடுறாரு. அவர்கூட ஆடுறதால நான் நெறைய கத்துக்குறேன் – ஆட்டநாயகன் சுப்மன் கில் பேட்டி

Shubman Gill
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-வது லீக் போட்டியானது அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

GT

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 227 ரன்களை குவித்தது. பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக நடப்பு சாம்பியனான குஜராத் அணி மீண்டும் ஒருமுறை லக்னோ அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் குஜராத் அணி பெற்ற வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் திகழ்ந்தார். ஏனெனில் இந்த போட்டியில் 51 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் என 94 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Saha and Gill

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் சுப்மன் கில் கூறுகையில் : லக்னோ அணி பவர்பிளேவின் போது மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தனர், ஆனால் அதன் பிறகு மோகித் சர்மா மிக சிறப்பாக பந்துவீசி எதிரணியை கட்டுக்குள் கொண்டு வந்தார். லக்னோ போன்ற பலம் வாய்ந்த அணியை 180 ரன்களுக்குள் நிறுத்தியது என்பது ஒரு நல்ல செயல்பாடு தான்.

- Advertisement -

அந்த வகையில் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர். அதோடு விரிதிமான் சாஹாவுடன் நான் செலவழிக்கும் நேரங்களில் நிறைய கிரிக்கெட்டை கற்றுக் கொள்கிறேன். அவருடன் பேட்டிங் செய்யும்போதும் சரி, ஸ்லிப் பகுதிகளில் நிற்கும் போதும் சரி நிறைய விடயங்களை அவரிடம் இருந்து கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் அவர் 16 ஆண்டுகளாக அதாவது ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் இருந்து விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : GT vs LSG : மொத்தத்துல எங்க குடும்பம் ஹாப்பியா இருக்கும். தோல்விக்கு பிறகு – க்ருனால் பாண்டியா பேசியது என்ன?

இத்தனை ஆண்டுகளாக விளையாடி வரும் ஒரு அனுபவ வீரருடன் விளையாடுவது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி. கடந்த இரண்டு போட்டிகளாக நான் சிக்ஸர்கள் அடிக்கவில்லை. ஆனால் இந்த போட்டியில் அணிக்கு தேவையான நேரத்தில் சூழ்நிலையில் சிக்ஸர்களை அடித்ததில் மகிழ்ச்சி என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement