GT vs LSG : மொத்தத்துல எங்க குடும்பம் ஹாப்பியா இருக்கும். தோல்விக்கு பிறகு – க்ருனால் பாண்டியா பேசியது என்ன?

Krunal-Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-வது லீக் போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

GT vs LSG

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது. குஜராத் அணி சார்பாக துவக்க வீரர்கள் விரிதிமான் சாஹா 81 ரன்களையும், சுப்மன் கில் 94 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே குவித்ததால் 56 ரன்கள் வித்யாசத்தில் லக்னோ அணி தோல்வியை சந்தித்தது.

GT

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம். 227 ரன்கள் என்பது சற்று அதிகமான ஸ்கோர் தான். இந்த ஸ்கோரை சேசிங் செய்ய வேண்டுமெனில் அனைத்து ஓவர்களிலும் ரன்கள் குவித்தே ஆக வேண்டும்.

- Advertisement -

ஒருவேளை நாங்கள் 200 முதல் 210-க்குள் அவர்களை கட்டுப்படுத்தியிருந்தால் இந்த போட்டியில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அது எங்களால் முடியாமல் போனது என்று க்ருனால் பாண்டியா கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எங்கள் குடும்பம் நிச்சயம் நாங்கள் இருவரும் கேப்டனாக விளையாடுவது நினைத்து பெருமைப்படும்.

இதையும் படிங்க : RR vs SRH : ஒரே ஓவரில் மாற்றிய கிளன் பிலிப்ஸ் – சந்தீப் சர்மாவின் சொதப்பலால் ஹைதராபாத் வரலாறு காணாத சரித்திர வெற்றி

எங்களுடைய அம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். போட்டிக்கு முன்னரே எப்படியும் இரண்டு பாயிண்டுகள் நம் வீட்டிற்கு தான் கிடைக்கும் என்று கூறியிருந்தார் என க்ருனால் பாண்டியா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement