RR vs SRH : ஒரே ஓவரில் மாற்றிய கிளன் பிலிப்ஸ் – சந்தீப் சர்மாவின் சொதப்பலால் ஹைதராபாத் வரலாறு காணாத சரித்திர வெற்றி

RR vs SRH
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 52வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அதில் புள்ளி பட்டியில் கடைசி இடத்தில் தவிக்கும் ஹைதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி ஜோஸ் பட்லருடன் இணைந்து அதிரடியை துவங்கிய ஜெய்ஸ்வால் 54 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்து 5 பவுண்டரி 2 சிக்சருடன் 35 (18) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் தொடர்ந்து ஹைதராபாத் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு அரைசதம் டெத் ஓவர்களில் வேகத்தை அதிகரித்து சதத்தை நெருங்கினார். இருப்பினும் 2வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ராஜஸ்தானை வலுப்படுத்திய அவர் துரதிஷ்டவசமாக 10 பவுண்டரி 4 சிக்ஸருடன் புவனேஸ்வர் குமாரிடம் 95 (59) ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

- Advertisement -

இறுதியில் சாம்சன் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 66* (38) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 214/2 ரன்களை எடுத்தது. அதைத்தொடர்ந்து 215 என்ற கடினமான இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு இம்பேக்ட் வீரராக களமிறங்கி அதிரடி காட்டிய அன்மோல் பிரீத் சிங் 51 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த போதிலும் 33 (25) ரன்களில் சகால் சுழலில் ஆட்டமிழந்தார்.

அவருடன் மறுபுறம் அசத்திய அபிஷேக் சர்மா அடுத்து வந்த ராகுல் திரிபாதியுடன் இணைந்து அதிரடியாக விளையாடி அரை சதமடித்தார். குறிப்பாக 13 ஓவர்கள் வரை நிலைத்து நின்று அசத்திய அவர் 2வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 5 பவுண்டரி 2 சிக்சருடன் 55 (34) ரன்கள் அஸ்வின் சுழலில் சிக்கினார். அதனால் வெற்றியை நெருங்கிய ஹைதராபாத்துக்கு கடைசி 5 ஓவரில் 69 ரன்கள் தேவைப்பட்ட போது புதிதாக களமிறங்கி 2 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு அச்சுறுத்தலை கொடுத்த ஹென்றிச் க்ளாஸெனை 26 (12) ரன்களில் சஹால் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அதோடு நிற்காத சஹால் தன்னுடைய அடுத்த ஓவரின் 2வது பந்தில் ராகுல் திரிபாதியை 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 47 (29) ரன்களில் அவுட்டாக்கி 5வது பந்தில் கேப்டன் மார்க்ரமை 6 (5) ரன்களில் காலி செய்தார். அதனால் ஓரளவு நிம்மதியடைந்த ராஜஸ்தானை அடுத்து களமிறங்கிய கிளன் பிலிப்ஸ் கடைசி 12 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட்ட போது இளம் வீரர் குல்தீப் யாதவ் வீசிய 19வது ஓவரில் 6, 6, 6, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்க விட்டு 5வது பந்தில் 25 (7) ரன்களில் அவுட்டானார்.

இறுதியில் சந்திப் சர்மா வீசிய கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த அப்துல் சமத் 2வது பதில் சிக்ஸர் அடித்து 3வது பந்தில் டபுள் ஓடி 4வது பந்தில் சிங்கிள் எடுத்தார். 5வது பந்தில் மார்கோ யான்சென் ஸ்ட்ரைக்கை மாற்ற கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது அப்துல் சமத் கேட்ச் கொடுத்து அவுட்டானதால் சந்திப் சர்மா வெற்றியை கொண்டாடினார்.

- Advertisement -

ஆனால் அதை நடுவர் நோ-பாலாக அறிவித்ததால் ஃப்ரீ ஹிட்டில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது அப்துல் சமத் சிக்ஸர் அடித்து 17* (7) ரன்களுடன் சூப்பர் பினிஷிங் கொடுத்து ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அதனால் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்களை எடுத்துப் போராடியும் வெற்றி காண முடியவில்லை.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹைதராபாத்துக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும் மார்க்ரம் சொதப்பியதால் பறிபோக தெரிந்த வெற்றியை கிளன் பிலிப்ஸ் ஒரே ஓவரில் 22 ரன்களை விளாசி மீண்டும் இழுத்தார். அதை சந்திப் சர்மாவின் சொதப்பலுடன் சமத் பினிஷிங் செய்ததால் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக 200+ இலக்கை வெற்றிகரமாக துரத்தி ஹைதராபாத் சாதனை வெற்றி பெற்றது.

இதையும் படிங்க:RR vs SRH : ஒரே ஓவரில் மாற்றிய கிளன் பிலிப்ஸ் – சந்தீப் சர்மாவின் சொதப்பலால் ஹைதராபாத் வரலாறு காணாத சரித்திர வெற்றி

இதற்கு முன் எஞ்சிய 9 ஐபிஎல் அணிகளை தவிர்த்து ஹைதராபாத் மட்டுமே 11 போட்டிகளில் வெற்றிகரமாக 200+ இலக்கை சேசிங் செய்யமால் இருந்தது. ஆனால் முதல் முறையாக இப்போட்டியில் அதை சாதித்துள்ள ஹைதராபாத் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ளது.

Advertisement