GT vs LSG : இதுக்குமேல என்ன வேணும்? அந்த ஒரு கேட்ச் தான் நாங்க ஜெயிக்க காரணம் – ஹார்டிக் பாண்டியா பேட்டி

Hardik Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-வது லீக் போட்டியானது இன்று மதியம் அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

GT vs LSG DE Kock Shami

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றிபெற்ற லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடி காட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்து 227 ரன்களை குவித்தது.

குஜராத் அணி சார்பாக துவக்க வீரர்கள் விரிதிமான் சாஹா 81 ரன்களையும், சுப்மன் கில் 94 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Rashid Khan

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற சிறப்பான வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : இந்த வெற்றிக்கு மேல் நான் என்ன எங்கள் அணி வீரர்களின் இருந்து கேட்க முடியும். ஒரு கட்டத்தில் 88 ரன்கள் இருந்தபோது கைல் மேயர்ஸ் கேட்சை ரஷீத் கான் பிடித்தார்.

- Advertisement -

அதுதான் இந்த போட்டியின் மேட்ச் வின்னிங் கேட்ச் ஏனெனில் லக்னோ அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக விளையாடியதால் போட்டி இரு அணிகளுக்குமே சமமாக செல்லும் என்று நினைத்தேன். ஆனால் ரஷீத் கான் கேட்ச் பிடித்து மொத்த மேட்ச்சையும் மாற்றிவிட்டார்.

இதையும் படிங்க : GT vs LSG : விரிதிமான் சாஹாவின் அதிரடியை பார்த்து வியந்து போய் விராட் கோலி – வெளியிட்ட பதிவு

அதன் பிறகு பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். க்ருனால் பாண்டியா உடனான எனது அன்பு மிகவும் உறுதியானது. நாங்கள் இருவரும் இப்படி விளையாடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement