GT vs LSG : விரிதிமான் சாஹாவின் அதிரடியை பார்த்து வியந்து போய் விராட் கோலி – வெளியிட்ட பதிவு

Saha
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-வது லீக் போட்டியானது அகமதாபாத் நகரில் தற்போது நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Saha 1

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடி காட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை குவித்தது. குஜராத் அணி சார்பாக துவக்க வீரர்கள் விரிதிமான் சாஹா 81 ரன்களும், சுப்மன் கில் 94 ரன்களும் குவித்து அசத்தினர். பின்னர் பாண்டியா 25 ரன்களையும், டேவிட் மில்லர் 21 ரன்களையும் குவித்தனர்.

இதன் காரணமாக தற்போது 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே குவித்ததால் 56 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் குஜராத் அணியின் துவக்க வீரரான விரிதிமான் சாஹா அதிரடியாக விளையாடிய விதம் அனைவரையும் வியக்க வைத்தது.

Saha and Kohli

குறிப்பாக 20 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என ஐம்பது ரன்கள் தொட்ட அவர் மொத்தம் 43 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 81 ரன்கள் குவித்து அசத்தினார். 38 வயதான விரிதிமான் சாஹா இந்த தொடரில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாத வேளையில் பிளே ஆஃப்க்கு செல்ல வேண்டிய இந்த முக்கியமான நேரத்தில் அவர் காட்டிய அதிரடி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

- Advertisement -

அதோடு அவரது இன்னிங்ஸ் பல்வேறு தரப்பிலும் இருந்தும் பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் அவர் விளையாடிய விதத்தை பார்த்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஆர்சிபி அணியின் வீரருமான விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதன்படி இன்று அவர் விளையாடிய விதத்தை டிவியில் கண்டு ரசித்த விராட் கோலி அதனை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு “What a Player” என்று தனது பாராட்டுகளை அவர் இன்ஸ்டாகிராம் மூலமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : GT vs LSG : கடைசி 10 ஓவரில் மாயாஜாலம் செய்து லக்னோவை சுருட்டி வீசிய குஜராத் – பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியானது, காரணம் இதோ

விராட் கோலியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தொடரில் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் சாஹா 273 ரன்கள் அடித்ததோடு தற்போது ஐபிஎல் தொடரானது பிளே ஆஃப் சுற்றினை நோக்கி நகரும் வேளையில் அவர் சிறப்பான ஃபார்மிற்கு திரும்பி உள்ளது அவர்களது அணி நிர்வாகத்தின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement