GT vs LSG : கடைசி 10 ஓவரில் மாயாஜாலம் செய்து லக்னோவை சுருட்டி வீசிய குஜராத் – பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியானது, காரணம் இதோ

GT vs LSG DE Kock Shami
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 6ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 51வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு பவர் ப்ளே ஓவர்களில் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 78 ரன்கள் குவித்து சாதனை படைக்கும் அளவுக்கு அதிரடியாக விளையாடிய ரித்திமான சஹா – சுப்மன் கில் ஆகியோர் ஓவருக்கு 10க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தனர்.

அதில் சற்று அதிரடியாக விளையாடிய சஹா 11 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 142 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த போது 10 பவுண்டரி  4 சிக்சருடன் 81 (43) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த ஜோடி என்ற சாதனையும் லக்னோவுக்கு எதிராக அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாகவும் அவர்கள் சாதனை படைத்தனர்.

- Advertisement -

அடுத்து வந்த களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 1 பவுண்டரி 2 சிக்சருடன் 25 (15) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக செயல்பட்ட சுப்மன் கில் கடைசி வரை அவுட்டாகாமல் 2 பவுண்டரி 7 சிக்ஸருடன் 94* (51) ரன்கள் எடுத்த போதிலும் சதமடிக்க முடியவில்லை. அவருடன் கடைசி நேரத்தில் டேவிட் மில்லர் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 21* (12) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் 227/2 ரன்கள் குவித்த குஜராத் தன்னுடைய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது.

அதைத்தொடர்ந்து 228 என்ற கடினமான இலக்கை துரத்திய லக்னோவுக்கு இந்த சீசனில் முதல் முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய குயிண்டன் டீ காக் உடன் இணைந்து அதிரடியாக செயல்பட்ட கெயல் மேயர்ஸ் தனது ஸ்டைலில் 7 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு 88 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறந்த தொடக்கத்தை கொடுத்த போது 48 (32) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அவரது அதிரடியால் 10 ஓவரில் 100க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்த லக்னோவின் வெற்றி பிரகாசமாகவே இருந்தது. ஆனால் அப்போது வந்த தீபக் ஹூடா தடுமாற்றமாக செயல்பட்டு 11 (11) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் குஜராத்தின் துல்லியமான பந்து வீச்சில் 4 (9) ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை ஏற்படுத்தினார். அடுத்த ஓவரிலயே மறுபுறம் அதிரடியாக போராடிய குவிண்டன் டீ காக் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 70 (41) ரன்களில் ரசித் கான் சுழலில் போல்டானார்.

அது போட்டியில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது போல் மறுபுறம் வழக்கத்திற்கு மாறாக தடவலாக செயல்பட்ட நிக்கோலஸ் பூரான் 3 (6) ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த ஆயுஷ் படோனி 21 (11) ரன்களில் அவுட்டாகி தோல்வியை உறுதி செய்தார். இறுதியில் கேப்டன் க்ருனால் பாண்டியா கோல்டன் டக் அவுட்டானதால் 20 ஓவர்களில் 171/7 ரன்களுக்கு லக்னோவை கட்டுப்படுத்திய குஜராத் 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய அந்த அணி சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்றும் பந்து வீச்சில் வள்ளலாக செயல்பட்ட லக்னோ 30+ ரன்களை எக்ஸ்ட்ராவாக வழங்கியது. மேலும் பேட்டிங்கில் மேயர்ஸ் – டீ காக் ஆகியோர் அதிரடியாக செயல்பட்டு 10 ஓவரில் வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அப்போது சுதாரித்த குஜராத் பவுலர்கள் கடைசி 10 ஓவர்களில் அட்டகாசமாக பந்து வீசி 70 ரன்களை மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்து 8வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை வலுவாக பெற்று கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:GT vs LSG : கடைசி 10 ஓவரில் மாயாஜாலம் செய்து லக்னோவை சுருட்டி வீசிய குஜராத் – பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியானது, காரணம் இதோ

அதனால் 16 புள்ளிகளை பெற்றுள்ள குஜராத் பிளே ஆஃப் சுற்றுக்கு 90% தகுதி பெற்றுள்ளது. ஏனெனில் வரலாற்றில் முதல் 16 புள்ளிகளை பெற்ற அணிகள் 100% பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதை தான் முன்னாள் வீரர் இர்பான் பதான் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக 2008, 2016, 2017, 2020, 2022 ஆகிய வருடங்களில் முதலாவதாக 16 புள்ளிகளை பெற்ற ராஜஸ்தான், ஹைதராபாத், மும்பை, மும்பை, குஜராத் ஆகிய அணிகள் கோப்பையும் வென்றன. அதனால் 2022 போலவே இப்போதும் செயல்படும் குஜராத் சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது

Advertisement