அது தான் உங்க பிரச்சனை.. டெஸ்டில் முன்னேற சுப்மன் கில்லுக்கு லெஜெண்ட் கவாஸ்கர் ஆலோசனை

Sunil Gavaskar 77
- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ள இந்தியா குறைந்தபட்சம் தோல்வியை தவிர்த்து சமன் செய்ய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது.

முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங் துறையில் கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரை தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு காரணமானது. அதிலும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் கொண்டாடும் சுப்மன் கில் 2 இன்னிங்சிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

கவாஸ்கர் ஆலோசனை:
இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதை போல டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆக்ரோசமாக விளையாட நினைப்பதே சுப்மன் கில் தடுமாறுவதற்கான காரணம் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே மெதுவாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானத்தை காட்டினால் அவர் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் கவாஸ்கர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சற்று ஆக்ரோசமாக விளையாடுகிறார் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்கும் டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்வதற்கும் சிறிய வித்தியாசம் இருக்கிறது. ஏனெனில் வெள்ளைப் பந்தை விட சிவப்பு பந்து பிட்ச்சில் பட்டதும் காற்றில் சற்று வேகமாக நகரும். அதே போல வெள்ளைப் பந்தை விட அது சற்று எக்ஸ்ட்ராவாக பவுன்ஸ் ஆகும்”

- Advertisement -

“இவற்றை அவர் மனதில் வைத்து விளையாட வேண்டும். தம்முடைய கேரியரை சிறப்பாக துவங்கிய கில் அதற்காக நிறைய பாராட்டுகளை பெற்றுள்ளார். எனவே அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என்று நாம் நம்புவோம். வருங்காலங்களில் இன்னும் கடினமாக உழைத்து அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க: என்னோட சகோதரி போன் பண்ணி அப்படி சொன்னதும் பண்ட் ஒரே அடியா போயிட்டார்னு நெனச்சிட்டேன் – அக்சர் படேல் பேட்டி

அவர் கூறுவது போல தன்னுடைய அறிமுக தொடரிலேயே சவாலான காபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 91 ரன்கள் குவித்து மகத்தான வெற்றி பெறுவதற்கு சுப்மன் கில் முக்கிய பங்காற்றினார். எனவே 2023 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்துள்ள அவர் தேவையான மாற்றங்களை செய்து விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்துவார் என்று நம்பலாம்.

Advertisement