என்னோட சகோதரி போன் பண்ணி அப்படி சொன்னதும் பண்ட் ஒரே அடியா போயிட்டார்னு நெனச்சிட்டேன் – அக்சர் படேல் பேட்டி

Axar-Patel-and-Pant
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 30 ஒருநாள் போட்டிகள், 33 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 66 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். இது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் அவர் இதுவரை 98 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர் என்பதோடு டெல்லி அணியின் கேப்டனாகவும் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

26 வயதான ரிஷப் பண்ட் மிகச் சிறப்பான ஃபார்மில் இருந்த வேளையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டெல்லியில் இருந்து தனது ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்த ரிஷப் பண்ட் எதிர்பாராத விதமாக அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

- Advertisement -

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி அளித்தனர். அப்போது ரிஷப் பண்ட் காயம் அடைந்த விடயம் வெளியாகி அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. அதோடு முதலுதவிக்கு பின்னர் அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது ஓராண்டு பூர்த்தி அடைய இருக்கும் வேளையில் இந்த இடைப்பட்ட நேரத்தில் எவ்வித போட்டிகளிலும் கலந்து கொள்ளாமல் இருக்கும் ரிஷப் பண்ட் தற்போது தான் மெல்ல மெல்ல தனது உடற்தகுதியை எட்டி வருகிறார். அதோடு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் தான் அவர் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் முதல் முறையாக ரிஷப் பண்டிற்கு விபத்து நடந்தது எப்படி தெரியவரும்? என்பது குறித்து பேசிய அக்சர் படேல் கூறுகையில் : ரிஷப் பண்ட்டிற்கு விபத்து நடந்த அன்று காலை என்னுடைய சகோதரி பிரதிமா எனக்கு போன் செய்தார். மேலும் அவர் என்னிடம் ரிஷப் பண்ட்டிடம் நீ எப்போது கடைசியாக பேசினாய்? என்று கேட்டார். நான் நேற்று இரவு தான் பேசலாம் என்று நினைத்தேன் ஆனால் பேச முடியவில்லை என்று கூறினேன்.

இதையும் படிங்க : ரோஹித் கிடையாது.. கோலி தான் இந்தியாவை இரக்கமற்ற டெஸ்ட் அணியா மாத்துனாரு.. தெ.ஆ லெஜெண்ட் பாராட்டு

பின்னர் என்னுடைய சகோதரி ரிஷப் பண்டிற்கு ஏற்பட்ட விபத்து குறித்து கூறிவிட்டு பின்னர் அவருடைய தாயின் நண்பரையும் கொடு என கேட்டிருந்தார். அப்போது எனது சகோதரி சொன்ன விடயத்தை பார்க்கும் போது நான் ரிஷப் பண்ட் நம்மையெல்லாம் பிரிந்து உயிரிழந்து விட்டார் என்றே எண்ணியதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement