மாயாஜால வெல்லாலகேவை எதிர்கொள்ள இதை செய்ங்க.. ஃபைனலில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு – சுனில் கவாஸ்கர் முக்கிய அட்வைஸ்

Sunil Gavaskar 3
- Advertisement -

ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் நடைபெற உள்ளது. அதில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியே நடப்பு சாம்பியன் இலங்கையை முன்னாள் சாம்பியன் இந்தியா எதிர்கொள்கிறது.

இவ்விரு அணிகளை பொறுத்த வரை ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா போன்ற முழுக்க முழுக்க உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்களை கொண்டிருக்கும் இந்தியா இலங்கையை விட மிகவும் வலுவான அணியாக இருப்பதால் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கிட்டத்தட்ட இதே வீரர்களை கொண்டிருந்த இந்தியாவை கடந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் தோற்கடித்த இலங்கை ஃபைனலில் வலுவான பாகிஸ்தானையும் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

- Advertisement -

வெல்லலாகே சவால்:
தற்போது சொந்த மண்ணில் அந்த ரசிகர்களுக்கு முன்னிலை விளையாடுவது இந்தியாவை விட இலங்கைக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். முன்னதாக இதே கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு 20 வயது இளம் இலங்கை ஸ்பின்னர் துணித் வெல்லாலகே மிகப்பெரிய சவாலை கொடுத்தார்.

குறிப்பாக 80 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோரை காலி செய்த அவர் விராட் கோலி, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா என இந்தியாவின் டாப் 5 தரமான பேட்ஸ்மேன்களை அசால்டாக தன்னுடைய மாயாஜால சுழலில் சிக்க வைத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அதனால் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா நல்லவேளையாக பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு அப்போட்டியில் வென்றது.

- Advertisement -

இருப்பினும் இந்த போட்டியிலும் நிச்சயமாக அவர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு திண்டாட்டத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டியில் வெல்லாலகே காற்றில் பந்தை சுழற்றும் போது அதை தாமதமாக எதிர்கொண்டு பின்னடைவை சந்திக்காமல் முன்கூட்டியே இறங்கி சென்று அடித்தால் மட்டுமே வெற்றிகரமாக செயல்பட முடியும் என்று இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சுனில் கவாஸ்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: IND vs SL : விராட், ரோஹித்தை விட அவரால் தான் ஃபைனலில் வித்யாசத்தை ஏற்படுத்தி இந்தியாவை ஜெயிக்க வைக்க முடியும் – கவாஸ்கர் வித்யாச பேச்சு

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் முடிந்த வரை விரைவாக பிட்ச்சில் பந்தை அடித்து வீசுவதற்கு முயற்சிப்பார்கள் என்று நினைக்கிறேன். இருப்பினும் அந்த பிட்ச்சில் பந்தை மேலே டாஸ் அப் செய்வதற்கு எளிதாக இருக்காது. எனவே ஒவ்வொரு முறையும் வெல்லாலகே பந்தை சிறிதளவு காற்றில் கொடுக்கும் போது அதை விரைவாக ஃபுட் ஒர்க்கை பயன்படுத்தி ட்ரைவ் அடிக்க முயற்சிக்க வேண்டும். அதே சமயம் பிட்ச் ஃபிளாட்டாக சுழலுக்கு சாதகமாக இல்லாமல் இருந்தால் அவரை தூக்கி அடிக்க முயற்சிக்காதீர்கள். விக்கெட்டை எடுக்க அவரை சிந்திக்க வையுங்கள்” என்று கூறினார்.

Advertisement