IND vs SL : விராட், ரோஹித்தை விட அவரால் தான் ஃபைனலில் வித்யாசத்தை ஏற்படுத்தி இந்தியாவை ஜெயிக்க வைக்க முடியும் – கவாஸ்கர் வித்யாச பேச்சு

Sunil Gavaskar 2
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் சிறப்பாக செயல்பட்டு தேவையான வெற்றிகளை பெற்ற நடப்பு சாம்பியன் இலங்கையை அதன் சொந்த மண்ணில் முன்னாள் சாம்பியன் இந்தியா தோற்கடித்து கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இந்த போட்டியில் சந்தேகமின்றி இந்தியா வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறையின் இரு துருவங்களாக கருதப்படும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது. சொல்லப்போனால் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 122* ரன்களும் இலங்கைக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 53 ரன்களும் அடித்து ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்கள்.

- Advertisement -

கவாஸ்கர் உறுதி:
அதனால் இந்த பெரிய போட்டியிலும் அந்த சீனியர் வீரர்கள் இந்தியாவின் வெற்றி பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர்களை விட பெரும்பாலும் சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடிய கொழும்பு மைதானத்தில் குல்தீப் யாதவ் தான் ஃபைனலில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றுவார் என்று சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “குல்தீப் யாதவ் பெரிய போட்டியில் தம்மால் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இத்தொடரில் காட்டியுள்ளார். பொதுவாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விக்கெட் எடுக்கும் பந்துகளை சிறந்த டாட் பந்துகளாகும். அந்த வகையில் சற்று ஃபிளாட்டாக வீசும் அவர் காற்றில் அதிகமாக கொடுக்காமல் பந்தை சுழற்றுவதால் அதை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக எதிர்கொள்வதற்கு கடினத்தை சந்திக்கிறார்கள்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்து 228 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய குல்தீப் யாதவ் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 போட்டியிலும் வெல்லாலகேவை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தி 4 விக்கெட்டுகளை எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு உதவினார். மேலும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடலிருந்தே குல்தீப் உச்சகட்ட ஃபார்மில் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: அந்த அவமானத்தை மறந்துடாதீங்க.. ஃபைனலில் இலங்கை உங்கள தோற்கடிக்க காத்திருக்காங்க..இந்தியாவை எச்சரித்த சோயப் அக்தர்

அதனால் இந்த போட்டியிலும் அவர் இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என்று உறுதியாக நம்பலாம். இந்த நிலைமையில் கொழும்பு நகரில் மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதால் போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற கேள்வியும் காணப்படுகிறது. இருப்பினும் அதை சமாளிப்பதற்காக ஆசிய கவுன்சில் ரிசர்வ் நாள் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement