அந்த அவமானத்தை மறந்துடாதீங்க.. ஃபைனலில் இலங்கை உங்கள தோற்கடிக்க காத்திருக்காங்க..இந்தியாவை எச்சரித்த சோயப் அக்தர்

- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்ற நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் முன்னாள் சாம்பியன் இந்தியா மோதும் மாபெரும் இறுதி போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. அதில் ஏற்கனவே 7 ஆசிய கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா இம்முறை 6 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 8வது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இவ்விரு அணிகளை பொறுத்த வரை விராட் கோலி, பும்ரா போன்ற உலகத்திலும் அறிந்த நட்சத்திர தரமான வீரர்களை கொண்டிருக்கும் இந்தியா வலுவான வலுவான அணியாக திகழ்வதால் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இளம் வீரர்களுடன் அசத்திய இலங்கை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை வீழ்த்தி ஃபைனலில் பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

- Advertisement -

எச்சரித்த அக்தர்:
மேலும் சொந்த மண்ணில் எந்த அணியும் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் என்பதால் இப்போட்டியில் இலங்கையை குறைத்து மதிப்பிடாமல் விளையாடினால் தான் இந்தியா வெல்ல முடியும் என்று சொல்லலாம். இந்நிலையில் இதே தொடரில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளை தோற்கடித்த இலங்கை ஃபைனலில் இந்தியாவை தோற்கடிப்பதற்கு காத்திருப்பதாக சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

எனவே கத்துக்குட்டியான வங்கதேசத்திடம் கடந்த போட்டியில் தோற்ற இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “வங்கதேசத்திடம் இந்தியா தோற்காது என்று நாம் அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் தோற்றனர். அது ஒரு அவமான தோல்வியாகும். அதே போல இலங்கையிடம் தோற்ற பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது அவமான தோல்வியாகும். இருப்பினும் அவற்றை தாண்டி இந்தியா ஃபைனலில் இருக்கிறது”

- Advertisement -

“எனவே வங்கதேசத்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து விழித்துக் கொண்டு கடினமான கம்பேக் கொடுத்து ஃபைனலில் அவர்கள் வெற்றி பெற வேண்டும். ஆனால் அதற்கு அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். ஏனெனில் இது சென்றதும் புதிதாக வெற்றி கிடைக்கும் போட்டியாக இருக்காது. மாறாக மிகவும் கடினமான போட்டியாக இருக்கும். அதில் இலங்கை இந்தியாவை தோற்கடிப்பதற்காகவே காத்திருக்கின்றனர்”

இதையும் படிங்க: IND vs SL : ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல்

“மேலும் 2023 உலக கோப்பைக்கு முன்னோட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் யார் வேண்டுமானாலும் வெல்லலாம். அதனால் இந்தியா விழித்துக் கொண்டு செயல்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் வங்கதேசத்திடம் தோற்றனர்” என்று கூறினார். இந்த நிலைமையில் இந்த போட்டியில் மழை வருவதற்கும் வாய்ப்பிருப்பதால் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement