IND vs SL : ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது இன்று செப்டம்பர் 17-ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரே இந்த போட்டியிலும் பங்கேற்பார்கள். மேலும் மிடில் ஆர்டரில் கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த விராட் கோலி, இஷான் கிஷன் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புவார்கள் என்று நம்பலாம்.

அதன்படி மூன்றாவது இடத்தில் விராட் கோலியும், நான்காவது இடத்தில் கே.எல் ராகுலும், ஐந்தாவது இடத்திலும் இஷான் கிஷனும் விளையாட வாய்ப்பு உள்ளது. அதேபோன்று ஆல்ரவுண்டர்களாக ஹார்டிக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோர் இடம் பிடிப்பார்கள்.

- Advertisement -

மீதமுள்ள பந்துவீச்சாளர்களுக்கான இடத்தில் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் இடம் பெறுவார். அவரை தவிர்த்து முகமது சிராஜ், பும்ரா, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம் பிடிப்பார்கள். அதன்படி இன்றைய இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அணி வீரர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம். சொல்லாமல் பேசாமல் நாட்டை விட்டே வெளியேறிய பாபர் அசாம் – என்னப்பா இதெல்லாம்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) கே.எல் ராகுல், 5) இஷான் கிஷன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) குல்தீப் யாதவ், 10) பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement