அணி வீரர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம். சொல்லாமல் பேசாமல் நாட்டை விட்டே வெளியேறிய பாபர் அசாம் – என்னப்பா இதெல்லாம்

Babar-Azam
- Advertisement -

நடப்பு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் போர் சுற்று ஆட்டத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியது. எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த ஆசியக் கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான அணி இப்படி இலங்கை அணியிடம் தோல்வியை சந்தித்தது அந்த அணி வீரர்களுக்கு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.

அதோடு இந்த தொடரில் நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப், இமாம் உல் ஹக் என முக்கிய வீரர்கள் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் எப்படி இதனை சமாளிப்பது என தற்போது பாகிஸ்தான் அணி சற்று கலக்கத்தில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான அணியின் கேப்டன் பாபர் அசாம் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த சக வீரர்களுடன் கோபமாக பேசியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி வெளியான செய்தியில் : பாபர் அசாம் போட்டிக்கு பின்னர் நேராக வீரர்களின் ஓய்வறைக்கு சென்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது நீங்கள் யாருமே பொறுப்பாக விளையாடவில்லை என்றும் வீரர்களை சாடியுள்ளார். இதை கேட்ட ஷாஹீன் அப்ரிடி யாரும் நன்றாக விளையாடவில்லை என்றால் சிறப்பாக விளையாடிய வீரர்களையாவது பாராட்டலாமே என்று கூறியுள்ளார். ஆனால் அப்போதும் கோபமடைந்த பாபர் அசாம் :

- Advertisement -

நான் கேப்டன் யார்? யார்? நன்றாக விளையாடினார்கள் என்பது எனக்கு தெரியும் என்று அவருக்கு பதிலளிக்க அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் பெரியதாக மாறியுள்ளது. பின்னர் முஹமது ரிஸ்வான் அவர்களை சமாதானப்படுத்தி விஷயங்களை அமைதிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இப்படி இந்த செய்தி வெளியாகி இருந்த வேளையில் பாகிஸ்தான் கேப்டனான பாபர் அசாம் வீரர்களிடம் சொல்லாமலேயே இலங்கை நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தான் திரும்பியதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : உங்களால எல்லா ஃபார்மட்லயும் விளையாட முடியாது.. சீக்கிரம் அந்த முடிவை எடுங்க – இந்திய வீரருக்கு சமீந்தா வாஸ் அறிவுரை

உலகக் கோப்பை தொடரானது துவங்க இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் வேளையில் இப்படி வீரர்களிடம் ஒற்றுமை இல்லாமல் அவர்களிடம் சண்டை போட்டு பாபர் அசாம் தனியாக இலங்கையை விட்டு வெளியேறியுள்ளது தற்போது பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement