உங்களால எல்லா ஃபார்மட்லயும் விளையாட முடியாது.. சீக்கிரம் அந்த முடிவை எடுங்க – இந்திய வீரருக்கு சமீந்தா வாஸ் அறிவுரை

Chaminda Vass
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதில் 2011 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ள இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அது உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சு துறையின் கருப்பு குதிரையாக கருதப்படும் பும்ரா கடந்த 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சந்தித்த காயத்திலிருந்து சுமார் ஒரு வருடம் கழித்து குணமடைந்து சமீபத்திய அயர்லாந்து டி20 கிரிக்கெட் தொடரில் கம்பேக் கொடுத்தார். அதில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகள் வென்று அசத்திய அவர் 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளது பந்து வீச்சு துறையை பலப்படுத்தியுள்ளது.

- Advertisement -

வாஸ் அறிவுரை:
முன்னதாக சாதாரணமாகவே வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி காயத்தை சந்திப்பார்கள் வழக்கமாகும். அந்த நிலைமையில் மற்ற பவுலர்களை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்டிருப்பதே பும்ரா காயத்தை சந்தித்ததற்கு முக்கிய காரணம் என்று நிறைய முன்னால் ஜாம்பவான் வீரர்கள் தெரிவித்தனர்.

எனவே அதிலிருந்து குணமடைந்து பும்ரா நீண்ட நாட்கள் விளையாடுவதற்கு ஒன்று ஆக்சனை மாற்ற வேண்டும் அல்லது ஓட்டத்தில் சில நடையை அதிகப்படுத்த வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டுமென கிளன் மெக்ராத், சோயப் அக்தர் போன்ற ஜாம்பவான்கள் சமீப காலங்களில் ஆலோசனை வழங்கியிருந்தனர். அந்த வரிசையில் இணைந்துள்ள இலங்கை ஜாம்பவான் சமிந்தா வாஸ் நீண்ட காலம் விளையாடுவதற்கு பும்ரா ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதே சரியான வழி என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

- Advertisement -

ஏனெனில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்த ஆக்சனை வைத்து விளையாடுவது மிகவும் கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பும்ரா போன்ற வீரர்கள் தனித்துவமான ஆக்சனை கொண்டிருக்கிறார்கள். எனவே அவரைப் போன்ற நட்சத்திர அந்தஸ்தையும் தரத்தையும் கொண்டிருப்பவரை நாம் பாதுகாக்க வேண்டும். ஏனெனில் அவர்களால் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட முடியாது. அதனால் அவரைப் போன்ற வீரருக்கு பொருந்தக்கூடிய ஃபார்மட்டை நாம் கண்டறிய வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அக்டோபர் 1க்குள்ள அதை செய்யலன்னா ஒழுங்கா அபராதம் கட்டுங்க.. தங்களது வீரர்களை எச்சரித்த ஆஸி வாரியம்.. விவரம் இதோ

அதே போல ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “விராட் மிகவும் ஸ்பெஷல் வீரர் என்பதை நாம் அறிவோம். அவர் கடந்த தசாப்தத்தில் அபாரமாக செயல்பட்டுள்ளார். அதே போல ரோகித் சர்மாவும் தம்முடைய 100% பங்களிப்பை இந்தியாவுக்காக கொடுப்பார் என்று சொல்ல முடியும். அவர்கள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக தங்களுடைய சிறந்த பங்களிப்பை கொடுக்க முயற்சிப்பார்கள் என்று உறுதியாக சொல்லலாம்” என கூறினார்.

Advertisement