அக்டோபர் 1க்குள்ள அதை செய்யலன்னா ஒழுங்கா அபராதம் கட்டுங்க.. தங்களது வீரர்களை எச்சரித்த ஆஸி வாரியம்.. விவரம் இதோ

Australian Team
- Advertisement -

சர்வதேச அரங்கில் கால்பந்தை தொடர்ந்து பெரிய அளவில் ரசிகர்களால் பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டிகள் எந்தளவுக்கு பரபரப்பான தருணங்களை விருந்து படைக்கிறதோ அந்தளவுக்கு சவாலானதாகவும் காயங்களை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. குறிப்பாக பந்தை ஓடிச்சென்று தடுப்பதிலிருந்து கேட்ச் பிடிப்பது வரை பல தருணங்களில் அதில் விளையாடும் வீரர்கள் காயங்களை சந்திப்பது வழக்கமாகும். அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பவுன்சர்களை தவறாக கணிக்கும் பேட்ஸ்மேன்கள் பலமுறை தங்களுடைய உடலிலும் தலையிலும் அடி வாங்குவதெல்லாம் சர்வ சாதாரணமாக நிகழக்கூடியதாகும்.

சொல்லப்போனால் ஆரம்ப காலங்களில் சுனில் கவாஸ்கர் போன்ற பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் இல்லாமலேயே மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில் விளையாடினர். இருப்பினும் நாளடைவில் வீரர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு உபகரணங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் சந்திப்பது என்பது மட்டும் குறைந்தபாடில்லை. அதன் உச்சகட்டமாக கடந்த 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹூக்ஸ் பவுன்சர் பந்தால் தலையில் அடி வாங்கி மோசமான காயத்தை சந்தித்து மருத்துவ சிகிச்சைகளை தாண்டி இயற்கையை எழுதியது ஒட்டுமொத்த உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியதை மறக்க முடியாது.

- Advertisement -

அபராதம் அறிவிப்பு:
அதை மேற்கொண்டு நிகழாமல் தடுப்பதற்காக எக்ஸ்ட்ரா உபகரணங்கள், தலையில் காயத்தை சந்திக்கும் வீரர்களுக்கு உடனடியாக மருத்துவ சோதனை தேவைப்பட்டால் சப்ஸ்டியூட் வீரர் போன்ற விதிமுறைகளை ஐசிசி கொண்டு வந்துள்ளது. ஆனாலும் அதை தாண்டி கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரபாடா வீசிய பவுன்சர் வந்து கேமரூன் கிரீன் தலையை தாக்கியதால் பாதியிலேயே வெளியேறினார்.

இந்நிலையில் இந்த காயங்களை தவிர்ப்பதற்காக தங்களுடைய வீரர்கள் அனைவருமே பேட்டிங் செய்யும் போது ஹெல்மெட் மட்டுமல்லாமல் கழுத்தை பாதுகாக்கும் நெக் கார்ட் எனப்படும் எக்ஸ்ட்ரா உபகரணத்தையும் அணிந்து விளையாட வேண்டும் என்று ஆஸ்திரேலியா வாரியம் அறிவித்துள்ளது. இது தங்களின் விதிமுறைகளில் ஒன்றாக சேர்க்கப்படுவதாக ஆஸ்திரேலியா வாரிய திட்ட இயக்குனர் பீட்டர் ரோச் அறிவித்துள்ளார்.

- Advertisement -

சொல்லப்போனால் அந்த உபகரணத்தை அணியுமாறு ஏற்கனவே ஆஸ்திரேலியா வாரியம் தங்களுடைய வீரர்களை அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் அது அசௌகரியமான உணர்வை கொடுப்பதால் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் அணிந்து கொண்டு விளையாடுவதில்லை. இருப்பினும் தற்போது அதற்கு கிடுக்கு பிடி போட்டுள்ள ஆஸ்திரேலிய வாரியம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தங்களுடைய வீரர்கள் அனைவரும் கட்டாயம் அணிந்து விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: மனசுல சூப்பர்ஸ்டார்ன்னு நினைப்பா? பாபர் அசாம் – ஷாஹீன் அப்ரிடி இடையே வாக்குவாதம்.. தோல்வியால் பாக் அணியில் ஏற்பட்ட மோதல்

குறிப்பாக உள்ளூர் அளவில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட அந்த உபகரணத்தை அணிய வேண்டும் என்று ஆஸ்திரேலியா வரையும் கண்டிப்பாக உள்ளது. ஒருவேளை அதை அணிந்து விளையாட மறுக்கும் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா வாரியம் அறிக்கை வாயிலாக வெளிப்படையாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் அந்த உபகரணத்தை விரும்பினால் மட்டும் இந்திய வீரர்கள் அணிந்து கொள்ளலாம் என்ற விதிமுறையை பிசிசிஐ கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement