அஸ்வின் வந்தா பலவீனமாகிடுவோம்.. பாண்டியாவுக்கு பதிலா அவங்கள செல்க்ட் பண்ணுங்க.. கவாஸ்கர் கருத்து

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 22ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் வலுவான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்விகளை சந்திக்காமல் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளில் விராட் கோலி, ட்ரெண்ட் போல்ட் போன்ற தரமான வீரர்கள் நிறைந்திருப்பதால் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் ஐசிசி தொடர்களில் கடந்த 20 வருடங்களாக நியூசிலாந்துடன் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்து முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையின் இந்தியா சொந்த மண்ணில் களமிறங்குகிறது. ஆனால் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் துறையில் சமநிலையை ஏற்படுத்தும் துருப்புச்சீட்டு வீரரான ஹர்திக் பாண்டியா காயத்தால் விளையாட மாட்டார் என்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கவாஸ்கர் கருத்து:
இருப்பினும் தற்போதைய நிலைமையை சமாளிப்பதற்காக சர்துள் தாக்கூர் கழற்றி விடப்பட்டு பாண்டியாவுக்கு பதிலாக பேட்டிங் துறையில் சூரியகுமார் யாதவும் பந்து வீச்சு துறையில் சமியும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது இடது கை பேட்ஸ்மேனாக இருக்கும் இசான் கிசான் மற்றும் நியூசிலாந்தை சுழலால் திணறடிப்பதற்கு அஸ்வின் தேர்வு செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் 2019 உலகக்கோப்பை செமி ஃபைனல் போல நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா எப்போதுமே ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்து வருவதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். எனவே அது போன்ற நிலைமையை சமாளிப்பதற்காக பேட்டிங் துறையில் ஆழத்தை ஏற்படுத்த தாக்கூர் இருக்க வேண்டுமென்று தெரிவிக்கும் அவர் பாண்டியாவுக்கு பதிலாக சூரியகுமார் அல்லது இசான் கிசான் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதே சமயம் மைதானம் வேகத்துக்கு சாதகமாக இருந்தால் தாக்கூருக்கு பதிலாக ஷமி விளையாடலாம் என்று தெரிவிக்கும் அவர் அஸ்வின் விளையாடக்கூடாது என்றும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை நான் இந்திய அணியில் இருந்தால் தற்சமயத்தில் சூரியகுமார் யாதவ் அல்லது இசான் கிசான் ஆகியோரை பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக தேர்வு செய்வேன். ஏனெனில் உலகத்தரம் வாய்ந்த நியூசிலாந்து பவுலிங் அட்டாக்கிற்கு எதிராக இந்தியாவின் டாப் 2 – 3 பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி வருவது பிரச்சினையாக இருக்கிறது”

இதையும் படிங்க: ரெண்டு டீம்லயும் ரெண்டு டிபார்ட்மென்ட்டும் செம ஸ்ட்ராங் தான். இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் – டாம் லேதம் பேட்டி

“எனவே அதை சமாளிக்க நீங்கள் உங்களுடைய பேட்டிங் ஆழத்தை அதிகரித்து தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை பாண்டியாவுக்கு பதில் அஸ்வின் வந்தால் அது உங்களுடைய பேட்டிங்கை பலவீனப்படுத்தும். எனவே இடது கை பேட்ஸ்மேன் இசான் கிசான் அல்லது சூரியகுமார் 6வது இடத்தில் விளையாட வேண்டும். அதே சமயம் வேகத்துக்கு சாதகமாக மைதானம் இருக்கும் பட்சத்தில் தாக்கூருக்கு பதிலாக ஷமியை கொண்டு வரலாம்” என்று கூறினார்.

Advertisement