எஸ்ஏ20 : 204 ரன்ஸ்.. ஃபைனலில் மிரட்டிய சன்ரைசர்ஸ்.. சிஎஸ்கே போல சாதனை.. கொண்டாடிய காவ்யா மாறன்

- Advertisement -

ஐபிஎல் போல் தென்னாப்பிரிக்காவில் எஸ்ஏ20 எனப்படும் டி20 தொடரின் 2024 சீசனின் மாபெரும் இறுதி போட்டி பிப்ரவரி 10ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்ற சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் டவுன் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின.

அந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 204/3 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு நட்சத்திர வீரர் டேவிட் மாலன் 6 ரன்னில் அவுட்டானாலும் மற்றொரு துவக்க வீரர் ஜோர்டான் ஹெர்மன் அதிரடியாக 42 (26) ரன்கள் எடுத்தார். அவரை விட மிடில் ஆடரில் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய டாம் எபேல் அரை சதமடித்து 55 (34) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

சாம்பியனாக சாதனை:
அதே போல கேப்டன் ஐடன் மார்க்ரம் 42* (26) ரன்களும் ட்ரிஷன் ஸ்டப்ஸ் சரவெடியாக 4 பவுண்டரி 3 சிக்சருடன் 56* (30) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தனர். மறுபுறம் சுமாராக பந்து வீசிய டர்பன் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 205 ரன்களை துரத்திய டர்பன் அணிக்கு ஆரம்பத்திலேயே நம்பிக்கை நட்சத்திரம் குவிண்டன் டீ காக் தடுமாறி 3 ரன்னிலும், ப்ரீட்கே 18 ரன்னிலும் அவுட்டானார்.

அந்த நிலையில் வந்த ஜேஜே ஸ்மட்ஸ் 1, பானுக்கா ராஜபக்சா 0 ரன்களில் மார்கோ யான்சென் வேகத்தில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் ஹென்றிச் கிளாசின் கோல்டன் டக் அவுட்டானது போட்டியில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

- Advertisement -

ஏனெனில் அதன் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தில் வியன் முல்டர் 38, ட்வயன் பிரிட்டோரிஸ் 28 ரன்களில் போராடி ஆட்டமிழந்தனர். இறுதியில் 17 ஓவரில் 115 ரன்களுக்கு டர்பன் அணியை ஆல் அவுட் செய்த சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் டவுன் 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்கோ யான்சென் 5 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.

சொல்லப்போனால் கடந்த வருடம் துவங்கப்பட்ட இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கிளையான சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் டவுன் முதல் வருடத்திலேயே ஐடன் மார்க்கம் தலைமையில் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்ற இந்த 2வது சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய அந்த அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: தோனி மற்றும் சிஎஸ்கே குடும்பத்தை பெருமையடைய வைப்பேன்.. அண்டர்-19 இந்திய வீரர் அவனிஷ் பேட்டி

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் 2010, 2011 வருடங்களில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த சிஎஸ்கே போலவே அபார சாதனை படைத்துள்ளது என்றே சொல்லலாம். அதை விட இந்த வெற்றியால் ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் சோகத்தை சந்தித்த சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் சிரித்த முகத்துடன் கோப்பையை முத்தமிட்டு கொண்டாடியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

Advertisement