ஐபிஎல் 2022 : வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முழு அணி – உத்தேச ப்ளேயிங் 11 இதோ

srh
- Advertisement -

பெங்களூருவில் இந்த வருடம் வழக்கம் போலவே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் மத்தியில் நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2022 மெகா வீரர்கள் ஏலத்தில் 204 வீரர்கள் சுமார் 551 கோடி ரூபாய் செலவில் அனைத்து 10 அணிகளுக்காகவும் விளையாட ஏலம் போயுள்ளார்கள். இந்த முறை நடந்த ஏலத்தில் வழக்கம் போலவே வெளிநாட்டு வீரர்களுக்கு மவுசு அதிகமாக காணப்பட்ட நிலையில் இந்திய வீரர்களும் அதற்கு சமமாக ஏலம் போனார்கள்.

SRH

- Advertisement -

முன்னதாக இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத் அணி நிர்வாகம் தாங்கள் விரும்பிய கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் இளம் வீரர்களான அப்துல் சமட், உம்ரான் மாலிக் ஆகிய 3 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. இருப்பினும் அந்த அணிக்கு நீண்ட நாட்களாக கேப்டனாகவும் முக்கிய வீரராகவும் விளையாடி வந்த ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை அந்த அணி நிர்வாகம் கழட்டி விட்டது அந்த அணி ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத்:
இதை அடுத்து நடைபெற்ற ஏலத்தில் சமீபத்தில் நல்ல பார்மில் இல்லாத வெஸ்ட்இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரானை 10.75 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு அந்த அணி நிர்வாகம் போட்டி போட்டு வாங்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் கடந்த வருடம் இவர் 12 போட்டிகளில் 4 டக் அவுட் உட்பட வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இருப்பினும் தற்போது அவர் ஓரளவு நல்ல ஃபார்ம்க்கு திரும்பியுள்ளார்.

srh

அது மட்டுமல்லாமல் தமிழக வீரர்களான வாசிங்டன் சுந்தரை 8.75 கோடிக்கும், நடராஜனை 4 கோடிக்கும் அந்த அணி வாங்கியது தமிழக ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்தது. மொத்தத்தில் ஏலத்தில் அனுமதிக்கப்பட்ட 90 கோடி ரூபாயில் 89.90 கோடிகளை செலவு செய்துள்ள அந்த அணி நிர்வாகம் 23 வீரர்களை மட்டுமே வாங்கியுள்ளது. இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள 23 பேரில் 15 இந்திய வீரர்களும் 8 வெளிநாட்டு வீரர்களும் ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ளார். இவர்களுக்கு செலவு செய்த தொகை போக அந்த அணியிடம் 10 லட்சம் மீதி உள்ளது.

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் உள்ள வீரர்களின் முழு விவரம் இதோ:
கேன் வில்லியம்சன் (14 கோடி), அப்துல் சமட் (4 கோடி), உம்ரான் மாலிக் (4 கோடி), நிக்கோலஸ் பூரான் (10.75 கோடி), வாஷிங்டன் சுந்தர் (8.75 கோடி), ராகுல் திரிபாதி (8.5 கோடி), ரோமரியோ ஷெப்பர்ட் (7.75 கோடி), அபிஷேக் சர்மா (6.5 கோடி), புவனேஸ்வர் குமார் (4.2 கோடி, மார்கோ ஜென்சென் (4.2 கோடி), நடராஜன் (4 கோடி), கார்த்திக் தியாகி (4 கோடி), ஐடெண் மார்க்ரம் (2.6 கோடி), சீன் அப்போட் (2.4 கோடி), கிளென் பில்லிப்ஸ் (1.5 கோடி), ஷ்ரேயஸ் கோபால் (75 லட்சம்), விஷ்ணு வினோத் (50 லட்சம்), பாசல்ஹக் பரூக்கி (50 லட்சம்), ஜெகதீசா சுசித் (20 லட்சம்), ஆர் சமர்த் (20 லட்சம்), ஷஷாங்க் சிங் (20 லட்சம்), சௌரப் துபே (20 லட்சம்), பிரியம் கார்க்(20 லட்சம்)

srh vs pbks

இந்த மெகா ஏலத்தின் முடிவில் மொத்த அணியில் இருந்து களத்தில் விளையாட சரியாக பொருந்த கூடிய திறமையான 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு அணி நிர்வாகத்துக்கு உள்ளது. அந்த வகையில்

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் – முழு அணி, உத்தேச ப்ளேயிங் 11 இதோ

ஐபிஎல் 2022 தொடரில் கூல் கேப்டன் கேன் வில்லியம்சன் தலைமையில் களமிறங்கப் போகும் உத்தேச 11 பேர் கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதோ:
கேன் வில்லியம்சன்(கேப்டன்)*, அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம்*, ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரான்(கீப்பர்)*, அப்துல் சமட், வாசிங்டன் சுந்தர், மார்கோ ஜென்சென்*, புவனேஸ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்.

Advertisement